• Jul 24 2025

தளபதி 67 படத்தில் நடிக்க ஆவலாக இருந்த விஷாலை ரிஜக்ட் செய்த பிரபலம்- இது தான் காரணமா?

stella / 2 years ago

Advertisement

Listen News!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில்  நடிகர் விஜய் நடிப்பில் LCU கான்செப்ட்டில் உருவாகும் லியோ படத்தின் டைட்டில் ப்ரோமோ நேற்று மாலை 5 மணிக்கு வெளியானது. இந்த ப்ரோமோ 24 மணி நேரத்தில் 27 மில்லியன் பார்வைகளை கடந்து சாதனைப் படைத்துள்ளது. கடந்த மாதம் சென்னையில் பூஜையுடன் தொடங்கிய இப்படத்தின் படப்பிடிப்பானது காஷ்மீர் பகுதிகளில் நடைபெற்று வருகிறது. 

இந்தப் படத்தில் விஜய்க்கு வில்லனாக சஞ்சய் தத், அர்ஜுன், மன்சூர் அலிகான், கெளதம் மேனன், மிஷ்கின் ஆகியோர் நடித்து வருகின்றனர்.லோகேஷின் திரைப்படங்களில் ஹீரோ கேரக்டரைப் போலவே வில்லன்களும் செம்ம மாஸாக வருவதுண்டு. மாஸ்டர் படத்தில் விஜய் சேதுபதியும், விக்ரம் படத்தில் விஜய் சேதுபதி, சூர்யாவும் வில்லன்களாக மிரட்டியிருந்தனர். அதேபோல் தளபதி 67க்கும் விஷாலை வில்லனாக நடிக்க வைக்க லோகேஷ் முயற்சி எடுத்தார்.


 இதற்காக மார்க் ஆண்டனி ஷூட்டிங்கில் இருந்த விஷாலை லோகேஷ் கனகராஜ் நேரில் சென்று சந்தித்து பேசினார். இந்த வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வந்தன. இதனால் விஜய்க்கு வில்லனாக விஷால் நடிக்கலாம் என எதிர்பார்க்கப்பட்டது.ஆனால் லியோ படத்தில் விஷால் நடிக்கவில்லை என்பது உறுதியானது. 

இதனை விஷாலே வெளிப்படையாக கூறியிருந்தார். விஜய்க்கு வில்லனாக நடிக்க ஆசை தான், ஆனால் கால்ஷீட் பிரச்சினை காரணமாக கமிட் ஆகவில்லை என லத்தி பட ப்ரோமோஷனில் பேசியிருந்தார். மேலும், தான் இயக்குநரானால் முதலில் விஜய் நடிக்கும் படத்தை தான் இயக்குவேன். அதற்கான கதையுடன் விஜய் கால்ஷீட்டுக்காக காத்திருப்பதாகக் கூறியிருந்தார்.


இந்நிலையில், விஜய்யின் லியோ படத்தில் நடிக்க விஷால் விருப்பத்துடன் இருந்ததாக சொல்லப்படுகிறது. ஆனால் லியோ தயாரிப்பாளர் செவன் ஸ்க்ரீன்ஸ் ஸ்டூடியோஸ் லலித் குமார் தான் விஷாலை புக் செய்ய வேண்டாம் என லோகேஷிடம் கூறிவிட்டாராம். சமீபகாலமாக விஷால் தனது கால்ஷீட்டில் சொதப்பி வருவதால் அவரை ரிஜக்ட் செய்துவிட்டாரம். விஷாலும் தனது கால்ஷீட் பிரச்சினையால் தான் லியோ படத்தில் நடிக்க முடியாமல் போனது என கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.



Advertisement

Advertisement