• Jul 26 2025

10 நாட்கள் முடிவில் தி லெஜண்ட் திரைப்படம் செய்துள்ள வசூல்-வெளியானது முழு விபரம்..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

தமிழகத்தில் மிகவும் பிரபலமான தொழிலதிபராகவும் சரவணா ஸ்டோர்ஸ் கடையின் உரிமையாளராகவும் அறியப்பட்டு மக்கள் மத்தியில் பிரபலமானவர் சரவணன் அருள்.

எப்போதுமே தனது தொழிலில் கவனம் செலுத்தி வருகின்ற இவர் தற்போது’ தி லெஜண்ட்’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு ஹீரோவாக அவதாரம் எடுத்திருக்கின்றார்.

ஜெ டி ஜெர்ரி என்பவரின் இயக்கத்தில் நடிகை ஊர்வசி ரவுத்தேலா இப்படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். தமிழ் சினிமாவில் இப்படத்தினூடாகவே ஊர்வசி ரவுத்தேலா முதன் முதலாக காலடி எடுத்து வைக்கின்றார்.

இவர்களுடன் மறைந்த நடிகர் விவேக், மயில்சாமி, பிரபு, நாசர், சச்சு, ரோபோ சங்கர், யோகிபாபு, ஆகியோர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இந்தப் படத்திற்கு ஹரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார்.இவ்வாறு இருக்கையில் இந்தப்படத்திற்கு கலவையான விமர்சனங்களையே பெற்று வருகின்றது.

இந்நிலையில், கடந்த 10 நாட்கள் முடிவில் சுமார் ரூ. 10.2 கோடியை தாண்டி வசூல் செய்து சாதனை படைத்து வருகிறது தி லெஜண்ட் திரைப்படம்.

முதல் படத்திலேயே லெஜண்ட் சரவணனுக்கு வசூல் ரீதியாக நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது என கோலிவுட் வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement