• Jul 25 2025

தமிழ் நாட்டில் வாரிசு படத்தின் வசூல்...முதல் நாளிலே இத்தனை கோடியா..? பாக்ஸ் ஆபிஸ் கணிப்பு

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

விஜய்யின் வாரிசு திரைப்படம் இன்று அதிகாலை தியேட்டர்களில் கோலாகலமாக ரிலீஸ் ஆகியுள்ளது.இப்படம் வெளியாகும் முன்னரே கோவில்களில் வழிபாடு, விதவிதமாக பேனர்கள், கட் அவுட்டுகள் என சிகர்கள் கொண்டாடி தீர்த்து வருகினறனர்.இன்று படம் வெளியானதையும் வேற லெவலில் செலிபிரேட் செய்து வருகின்றனர். 

ரசிகர்கள் மட்டுமின்றி சினிமா பிரபலங்களும் விஜய்யின் வாரிசு படத்தை பார்க்க ஆர்வம் காட்டி வருகின்றனர்.  அஜித்தின் துணிவு படமும் இதே நாளில் ரிலீஸ் ஆவதால் தியேட்டர்கள் இரண்டு படங்களுக்கும் பகிர்ந்து அளிக்கப்பட்டது இருக்கிறது. தற்போது இரண்டு படங்களும் ரிலீஸ் ஆகி விமர்சனங்களும் வர தொடங்கிவிட்டது.

துணிவு படத்தை விட வாரிசு படம் தான் பெரிய அளவில் ப்ரீ ரிலீஸ் பிஸ்னஸ் செய்து இருக்கிறது என முன்பே தகவல் வந்தது குறிப்பிடத்தக்கது.

இவ்வாறுஇருக்கையில்  தற்போது முதல் நாளில் வாரிசு படம் எவ்வளவு வசூலிக்கும் என கணிக்கப்பட்டு உள்ளது.

தமிழ்நாட்டில் மட்டும் வாரிசு படம் முதல் நாளில் 25 கோடி ரூபாய் அளவுக்கு வசூலிக்கும் என கணிக்கப்பட்டு உள்ளது. முழு வசூல் விவரம் என்ன என்பது நாளை தான் தெரியவரும். 

Advertisement

Advertisement