• Jul 23 2025

வசூல் வேட்டையில் சிகரம் தொட்ட துணிவு.. அடேங்கப்பா மொத்தம் இத்தனை கோடியா..? வாயைப் பிளந்த ரசிகர்கள்..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாகத் திகழ்ந்து வருபவர்கள் விஜய் மற்றும் அஜித். இவர்கள் இருவருக்குமே கோடிக்கணக்கில் ரசிகர்கள் உள்ளனர். மேலும் நீண்ட இடைவெளிக்குப் பின்னர் ரசிகர்களின் பிரம்மாண்ட எதிர்பார்ப்புக்கு மத்தியில், ஜனவரி 11ஆம் தேதி பொங்கல் பண்டிகையை முன்னிட்டு விஜய்யின் 'வாரிசு' படமும் அஜித்தின் 'துணிவு' திரைப்படமும் வெளியாகி இருந்தது.


இவ்விரண்டு படங்களும் வெளியாகிய நாள் முதலே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இந்நிலையில் இந்த இரு திரைப்படங்களும் வெளிவந்து தற்போது 17 நாட்கள் கடந்துவிட்ட நிலையில் துணிவு படத்தினுடைய வசூல் நிலவரம் வெளியாகி இருக்கின்றது.


இப்படமானது வங்கி பற்றிய பல விஷயங்களை மக்களுக்கு கூறியிருக்கிறது, மேலும் துணிவு படத்தை பார்த்தவர்களும் "நானும் வங்கி கணக்கினால் சில பாதிப்புகளை சந்தித்துள்ளேன்" என பல்வேறுபட்ட கருத்துக்களை முன்வைத்துக் கூறியிருந்தார்கள்.

இந்நிலையில் தற்போது இப்படம் உலகம் முழுவதுமே மொத்தமாக இதுவரை ரூ. 225 கோடி வரை வசூலித்துள்ளதாக தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. அதுமட்டுமல்லாது அஜித்தின் திரைப்பயணத்திலேயே இது பெஸ்ட் கலெக்ஷன் படம் எனவும் புகழ்ந்து கூறப்படுகிறது.


இன்னொரு முக்கிய விடயம் என்னவெனில் இப்போதும் துணிவு படத்திற்கு நல்ல புக்கிங் வந்துகொண்டிருப்பதால் வரும் நாட்களிலும் வசூல் ரீதியாக நல்ல கலெக்ஷன் வரும் என கூறப்படுகிறது

Advertisement

Advertisement