• Jul 25 2025

மூர்த்தியைப் பார்க்க வந்த கதிரை துரத்தி விட்ட தனம்- பரபரப்பான பாண்டியன் ஸ்டோர்ஸ் புரோமோ

stella / 3 years ago

Advertisement

Listen News!

தமிழில் முக்கிய தொலைக்காட்சிகளில் ஒன்றான விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ். நான்கு சகோதரர்களின் ஒற்றுமை எடுத்துக் காட்டுவதால் இந்த சீரியலுக்கென்று தனி ரசிகர் பட்டாளமே காணப்படுகின்றது.

இந்த சீரியலில் கடந்த 1 மாதக்காலமாக முல்லை – கதிர் குழந்தை பிரச்சனை பற்றிய எபிசோடு தான் ஒளிப்பரப்பாகி வருகின்றது. ஆரம்பத்தில் ரசிகர்கள் இதை சுவாரசியமாக பார்த்தாலும், தொடர்ந்து முல்லை – கதிர் காதல் ரசிகர்களை சலிப்படையச் செய்துள்ளது.

மேலும் முல்லைக்கு ரீட்மென்ட் செய்ததால் அதிக கடன் வந்த விட்டதாக குடும்பத்துக்குள் அடிக்கடி பிரச்சினைகள் வந்தவாறு இருந்தன. மீனாவின் அப்பாவும் கதிரை மரியாதைக் குறைவாகப் பேசியதால் கதிர் கடனைக் கட்டாமல் வீட்டுக்கு வரமாட்டேன் என்று முல்லையைக் கூட்டிக் கொண்டு கிளம்பி விடுகின்றார்.

கதிர் வீட்டை விட்டு சென்ற காரணத்தால் மூர்த்திக்கு நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மூர்த்தியைப் பார்க்க வந்த கதிரிடம் தனம் வீட்டுக்கு வரும் படி கெஞ்சுகின்றார். ஆனால் கதிரோ மறுத்து விடுகின்றார் இது குறித்த புரோமோ வெளியாகி வைரலாகி வருவதைக் காணலாம்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement