• Jul 25 2025

விஜய் தேவர் கொண்டா நடித்து வரும் குஷி படத்தின் படப்பிடிப்பை நிறைவு செய்த படக்குழுவினர்- கேக் வெட்டிக் கொண்டாட்டம்

stella / 2 years ago

Advertisement

Listen News!

இயக்குநர் ஷிவா நிர்வாணா இயக்கத்தில் விஜய்தேவர் கொண்டா நடிப்பில் தமிழ், மலையாளம், கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளில் உருவாகி வரும் திரைப்படம் தான் குஷி. இதில் கதாநாயகியாக சமந்தா நடித்துள்ளார். இப்படம் காதல் காவியமாக உருவாகி வருகின்றது. இப்படம்  செப்டம்பர் 1-ஆம் தேதி ரிலீசாக உள்ளது.


கடந்த 5 மாதங்களாக இந்த படத்தின் படப்பிடிப்பு பல்வேறு இடங்களில் எடுக்கப்பட்டு வந்தது. ஏற்கனவே இப்படத்தின் படப்பிடிப்பை சமந்தா முடித்துவிட்ட நிலையில் இன்று ஒட்டு மொத்த படப்பிடிப்பும் நிறைவடைந்துள்ளது. கடைசி நாள் படப்பிடிப்பில் விஜய் தேவாரகொண்டா கலந்து கொண்டுள்ளார்.


படக்குழுவினர் அவருடன் கேக் வெட்டி, ஒட்டுமொத்த படப்பிடிப்பும் முடிவடைந்து விட்டதாக தற்போது அறிவித்துள்ளனர்.இதுகுறித்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. ஏற்கனவே 'குஷி' படத்தில் இருந்து இரண்டு சிங்கிள் பாடல்கள் வெளியாகி, ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், விரைவில் இப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. 


அதே போல் இப்படத்தின் ஆடியோ லான்ச்சை பிரமாண்டமாக நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.சமந்தா நடிப்பில் கடைசியாக வெளியான, 'சகுந்தலம்' மற்றும் விஜய் தேவர்கொண்டா நடிப்பில் வெளியான 'லிகர்' ஆகிய படங்கள் எதிர்பார்த்த வெற்றியை பெற்று தராத நிலையில், இப்படம் இவர்கள் இருவருக்குமே வெற்றிப்படமாக அமையும் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement