• Jul 25 2025

அந்த விஷயத்தில் முன்னாள் கணவரையே அடிச்சுத் தூக்கிய சமந்தா... நாக சைதன்யாவின் தற்போதைய நிலை..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாகத் திகழ்ந்து வருபவர் சமந்தா. சினிமாவில் உள் நுழைந்து குறுகிய காலத்திலேயே ஏராளமான ரசிகர்களை தன்னுடைய நடிப்பினால் கொள்ளை கொண்டவர். இவர் நடிப்பில் உருவான படங்களோ ஏராளம். 


சினிமாவில் படுபிஸியாக இருந்து வந்த இவர் கடந்த 2017ஆம் ஆண்டு தனது பல நாள் காதலரான நாகசைத்தன்யாவை திருமணம் செய்துகொண்டார். இருப்பினும் சில ஆண்டுகள் மட்டுமே நீடித்த இந்த காதல் திருமணம் ஆனது கடந்த ஆண்டு யாருமே எதிர்பாராத வகையில் விவாகரத்தில் முடிந்தது.


ஆனாலும் அதன் பின்னரும் இருவரும் தங்களது வேளைகளில் பிஸியாக இருந்து வருகின்றார்கள். அந்தவகையில் சமந்தாவின் நடிப்பில் இன்று வெளிவந்துள்ள திரைப்படம் 'யசோதா'. தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் பிரமாண்டமாக வெளிவந்துள்ள இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. 


அதாவது ஹைதாபாத்தில் முதல் நாள் அட்வான்ஸ் புக்கிங்கில் மட்டுமே ரூ. 65 லட்சத்திற்கும் மேல் வசூல் செய்துள்ளது சமந்தாவின் யசோதா. இந்நிலையில் சமீபத்தில் நாகசைதன்யாவின் நடிப்பில் வெளிவந்த Thank you திரைப்படம் கூட ஹைதாபாத் அட்வான்ஸ் புக்கிங்கில் ரூ. 63 லட்சம் மட்டுமே வசூல் செய்திருந்தது.

இதன் காரணமாக தன்னுடைய முன்னாள் கணவரின் வசூல் சாதனையை அடிச்சுத் தூக்கி முறியடித்துள்ளார் சமந்தா. இதனால் தற்போது இராண்டவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார் நாகசைத்தன்யா என சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Advertisement

Advertisement