• Jul 25 2025

CWC டைட்டில் வின்னர் இந்த ஆண் தான்... வெளியானது உறுதியான தகவல்... 2ஆம், 3ஆம் இடம் யார் தெரியுமா..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் தொலைக்காட்சியில் குக் வித் கோமாளி சீசன் 4 நிகழ்ச்சி செம ஜாலியாக சென்றது. ஜனவரி மாதம் தொடங்கப்பட்ட இந்நிகழ்ச்சி இப்போது இறுதிக்கட்டத்தை எட்டிவிட்டது. இந்த சீசனில் யார் வெல்லப்போவது என்று பார்க்க ரசிகர்கள் ஆவலாக உள்ளார்கள்.

அந்தவகையில் மைம் கோபி, ரண், சிவாங்கி , ஸ்ருஷ்டி, விசித்திரா, கிமற்றும் ஆண்ட்ரியன் என ஆறு போட்டியாளர்கள் இறுதிப் போட்டிக்குத் தேர்வாகியுள்ளனர்.


இந்நிலையில் இந்த சீசனில் டைட்டிலை வின் பண்ணியது யார் என்பது குறித்த தகவல் தற்போது வெளிவந்துள்ளது. அந்தவகையில் குக்வித் கோமாளி ஷோவில் கடந்த 3சீசன்களிலும் இல்லாத அளவிற்கு முதன்முறையாக ஆண் போட்டியாளர் ஒருவர் டைட்டிலை வென்றுள்ளார்.


அதாவது மைம் கோபி தான் முதல் இடத்தைப் பிடித்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கின்றது. இதனையடுத்து இரண்டாம் இடத்தை ஸ்ருஷ்டியும், மூன்றாவது இடத்தை விசித்திராவும் பிடித்துள்ளார்கள்.


மேலும் ஷிவாங்கி தான் இந்த சீசனின் வெற்றியாளர் எனப் பலரும் நினைத்து வந்த நிலையில் மைம் கோபி வெற்றியீட்டியுள்ளார் என்ற விடயமானது பலருக்கும் அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது.

Advertisement

Advertisement