• Jul 24 2025

விடாமுயற்சி படத்திற்காக லைகா நிறுவனம் எடுத்த முடிவு- அடடே சூப்பர் அப்டேட்டாக இருக்கே

stella / 2 years ago

Advertisement

Listen News!

அஜித்தின் 62 வது படத்தை இயக்க பல முன்னணி இயக்குனர்கள் ஆர்வம் காட்டினாலும் மகிழ் திருமேனியே அந்த வாய்ப்பைப் பெற்றார். அதன்படி இவரது இயக்கத்தில் உருவாகும் இப்படத்திற்கு  விடா முயற்சி எனப் பெயர் வைக்கப்பட்டுள்ளது.இந்தப்படத்தின் அறிவிப்பே ரசிகர்களின் நீண்ட காத்திருப்புக்கு பின்னரே வெளியானது. 

 லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் அனிரூத் இந்தப்படத்திற்கு இசையமைக்கவுள்ளார். இதனிடையில் அண்மையில் லைகா நிறுவன அலுவலகத்தில் அமலாக்கத்துறை ரைடு நடத்தியது. இதனால் 'விடாமுயற்சி' படம் மேலும் தள்ளிப்போனது.


இந்நிலையில் இந்தப்படம் குறித்த லேட்டஸ்ட் அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி வலைப்பேச்சு வீடியோவில் பேசியுள்ள அந்தணன், 'விடாமுயற்சி' படத்தை கைவிடக்கூடாது என்பதில் லைகா நிறுவனம் உறுதியாகவுள்ளதாம். இதற்காக சினிமா பைனான்சியர் அன்பு செழியன் உதவியுடன் இந்தப்படத்தை துவங்க லைகா நிறுவனம் பிளான் போட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.


மேலும், தற்போது 'விடாமுயற்சி' படப்பிடிப்பிற்கான லொகேஷன்களை தேர்தெடுக்கும் வேளையில் மகிழ் திருமேனி இறங்கியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இதனால் இந்த மாதமே இதன் படப்பிடிப்பு துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 


Advertisement

Advertisement