• Jul 24 2025

ஜெயிலில் இருந்து வெளியே வந்த சரவணன் எடுத்த முடிவு.. ஷாக்கான அர்ச்சனா – ராஜா ராணி 2 இன்றைய எபிசோட் அப்டேட்.. .!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் தான் ராஜா ராணி-2.விறுவிறுப்பாக ஓடிக்கொண்டு இருக்கும் இச் சீரியலின் இன்றைய எபிசோட்டில் என்ன நடக்கப்போகின்றது என்பதை பார்ப்போம்...

சரவணன் மீது எந்த தவறும் இல்லை என சிவகாமி குடும்பத்தினர் மொத்த பேரும் சொல்லிக் கொண்டிருக்க போலீஸ் அதனை நம்ப மறுக்கிறது.சரவணன் கடையில் இருந்து தான் கலப்பட எண்ணெய் கைப்பேற்றப்பட்டது அதனால் அவர் மீது கேஸ் போடுவோம் எதுவாக இருந்தாலும் கோர்ட்டில் பார்த்துக் கொள்ளுங்கள் என போலீஸ் பேசிக் கொண்டிருக்க அப்போது பரந்தாம நாட்கள் வந்து ஒழுங்கு மரியாதையா தேர்தலில் இருந்து விலகிவிடு என மிரட்டும் தோணியில் பேச இது அனைத்தும் பரந்தாமன் செய்த வேலைதான் என தெரிய வருகிறது.


அத்தோடு இருந்த போதும் சரவணனை வெளியே விட மறுப்பு தெரிவிக்க ஊர் மக்கள் ஸ்டேஷனுக்கு வெளியே கொடு சரவணன் விடுதலை செய்ய கோஷமிடுகின்றனர்.இதன்  பிறகு சரவணன் கடையில் இருந்து எடுத்து வந்த ஸ்வீட்டை சாப்பிட்டு இங்கேயே இருக்கிறோம் எங்களுக்கு ஏதாவது சரவணன் மீது கேஸ் போடுங்கள் என உறுதியாக போராடுகின்றனர்.



அதன்பின்னர் ஜெசி சரவணன் கடையில் இருந்து ஸ்வீட் எடுத்து வந்தேன் இது அனைத்தும் சரவணன் மாமா கடையிலிருந்து எடுத்து வந்தது தான் நீங்க எண்ணெய்ய டெஸ்ட் பண்ண நீங்கள் ஸ்வீட்ட டெஸ்ட் பண்ணிங்களா அதை கலப்படம் இருக்கானு கண்டுபிடித்தீர்களா என கேட்க சரவணன் நீங்க எண்ணெய்ய மட்டும் தானே டெஸ்ட் பண்ணுங்க என சொல்கிறார்.

இதன் பிறகு உணவு பாதுகாப்பு அதிகாரிகள் மக்கள் முன்னாடியே ஸ்வீட் டெஸ்ட் செய்து அதில் கலப்படம் இல்லை என்பதை உறுதி செய்கின்றனர். பிறகு போலீசுக்கு பரந்தாமன் போன் போட்டு என்ன ஆச்சு அவன வெளியே விட போறியா கருணாகரன் பேச சொல்லட்டுமா என கேட்க அதெல்லாம் வேண்டாம் நான் பாத்துக்கிறேன் என சொல்ல அப்போது இன்னொரு போலீஸ் வந்து சரவணனின் மனைவி சந்தியா ஐபிஎஸ் அதிகாரி தேர்வில் பாஸ் ஆகி பயிற்சியில் இருப்பதாகவும் இதே ஊருக்குத்தான் போஸ்டிங் வாங்கி வரப் போவதாகவும் கூறுகிறார்.

இதனால் பயந்து போகும் போலீஸ் சரவணன் மீது எந்த தவறும் இல்லை என அவரை ரிலீஸ் செய்கிறது. அதன் பின்னர் சரவணனை வீட்டுக்கு அழைத்து வரும் சிவகாமி அவன் தலையில் தண்ணீர் ஊற்றி திருஷ்டி எடுக்கிறார். பிறகு நடந்தது எல்லாம் கெட்ட கனவா நினைச்சு மறந்திடு என சொல்ல அப்படி எல்லாம் விட முடியாது இதுதான் ஆரம்பம் என சரவணன் கூறுகிறார்.

அந்தப் பரந்தாமன் தான் இந்த வேலையை பண்ணி இருக்கணும் என சொல்ல செந்தில் நீ எப்படி பரந்தாமணனை சொல்லலாம் என சண்டைக்கு வருகிறார்.அத்தோடு  அப்போ நான் உன்கிட்ட ஒன்னே ஒன்னு கேட்கிறேன் என சொல்லி வீட்டில் குடோன்ல இருந்த எண்ணெயில் எப்படி கலப்பட எண்ணெய் வந்தது என கேட்க அர்ச்சனா அதிர்ச்சி அடைகிறாள். இத்துடன் இன்றைய ராஜா ராணி 2 சீரியல் எபிசோட் முடிவடைகிறது.


Advertisement

Advertisement