• Jul 26 2025

CWC ஷோவில் பிரபலங்கள் வாங்கிய சம்பள விபரம்... அடேங்கப்பா இவருக்குத் தான் அதிகமா..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் தொலைக்காட்சியில் குக் வித் கோமாளி சீசன் 4 நிகழ்ச்சி செம ஜாலியாக சென்றது. ஜனவரி மாதம் தொடங்கப்பட்ட இந்நிகழ்ச்சி இறுதிக்கட்டத்தை எட்டிவிட்டது. இந்த சீசனில் யார் வெல்லப்போவது என்று பார்க்க ரசிகர்கள் ஆவலாக உள்ளார்கள்.


அந்தவகையில் மைம் கோபி, ரண், சிவாங்கி , ஸ்ருஷ்டி, விசித்திரா, கிமற்றும் ஆண்ட்ரியன் என ஆறு போட்டியாளர்கள் இறுதிப் போட்டிக்குத் தேர்வாகி இருந்தனர். இதனையடுத்து இந்த சீசனில் டைட்டிலை வின் பண்ணியது யார் என்பது குறித்த தகவல் ஏற்கெனவே இணையத்தில் கசிந்துள்ளது. 

அந்தவகையில் குக்வித் கோமாளி ஷோவில் மைம் கோபி தான் முதல் இடத்தைப் பிடித்துள்ளதாகவும், இதனையடுத்து இரண்டாம் இடத்தை ஸ்ருஷ்டியும், மூன்றாவது இடத்தை விசித்திராவும் பிடித்துள்ளதாக கூறப்படுகின்றது.


இந்நிலையில் குக் வித் கோமாளி ஷோவில் கலந்து கொண்ட பிரபலங்கள் ஒரு எபிசோட்டுக்கு எவ்வளவு சம்பளம் வாங்கினார்கள் என்பது குறித்த தகவல் தற்போது வெளியாகி இருக்கின்றது. 

அந்தவகையில் சிவாங்கி- ரூ. 20 ஆயிரமும், விஜே விஷால்- ரூ. 25 ஆயிரமும், ராஜ் அய்யப்பா- ரூ. 26 ஆயிரமும், விசித்ரா- ரூ. 30 ஆயிரமும், ஷெரின்- ரூ. 35 ஆயிரமும், சிருஷ்டி, ஆண்ட்ரியன்- ரூ. 30 ஆயிரமும், மைம் கோபி- ரூ. 40 முதல் 50 ஆயிரமும் வாங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement