• Jul 26 2025

பார்த்திபனின் ‘குண்டக்க மண்டக்க’ பட இயக்குநர் காலமானார்-இரங்கல் தெரிவிக்கும் திரையுலகம்..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

பார்த்திபன் நடித்த குண்டக்க மண்டக்க பட இயக்குநர் எஸ். அசோகன்  திடீரென மரணமடைந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தமிழச்சி, பொன்விழா, குண்டக்க மண்டக்க உள்ளிட்ட திரைப்படங்களுக்குக் கதை , திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுள்ளார் எஸ். அசோகன். 



மேலும் அவருக்கு ராஜலெட்சுமி என்ற மனைவியும் பகவத் கீதன் என்ற மகனும் உள்ளார்கள் என கூறுகின்றனர்.

சென்னை வளசரவாக்கம் பிருந்தாவன் நகரில் வசித்து வந்த எஸ்.அசோகன் மாரடைப்பால் சென்னையில் இன்று காலமானார். 

மேலும் அவரது உடல் சென்னையில் இருந்து எடுத்து வரப்பட்டு அவரது சொந்த ஊரான திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அடுத்த உள்ளிக்கோட்டை தெற்கு தெரு இல்லத்தில் வைக்கப்பட்டு அஞ்சலிக்கு பின் இன்றிரவு இறுதிச் சடங்குகள் நடைபெற்ற உள்ளன. 

Advertisement

Advertisement