• Jul 26 2025

புஷ்பா 2 படத்தின் ஷுட்டிங்கை கேன்சல் செய்த இயக்குநர்- இப்படியொரு காரணமா?- ரசிகர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி

stella / 2 years ago

Advertisement

Listen News!

அல்லு அர்ஜுன், பகத் பாசில் மற்றும் ராஷ்மிகா மந்தனா நடிப்பில், சுகுமார் இயக்கத்தில், தேவி ஸ்ரீ பிரசாத் இசையில் வெளியாகி பிரம்மாண்ட வெற்றி பெற்றது புஷ்பா படம். தெலுங்கு, தமிழ், இந்தி என பான் இந்தியா படமாக வெற்றி பெற்றது.

குறிப்பாக சாமி சாமி பாடல் ராஷ்மிகாவை பட்டி தொட்டியெங்கும் கொண்டு சேர்த்து என்றே கூறலாம். பிளாக்பஸ்டர் திரைப்படமான புஷ்பா தற்போது அதன் இரண்டாம் பாகமான புஷ்பா 2 தி ரைஸ் படத்தின் சூட்டிங் தீவிரமாக நடைபெற்று வருகிறது.


இதில் அல்லு அர்ஜுன் மற்றும் பிற நடிகர் நடிகைகள் கலந்துகொண்டனர். மேலும், இலங்கை மற்றும் தாய்லாந்தில் ஷூட் செய்யவும் திட்டமிடப்பட்டிருந்தது. எனவே படத்தின் ஷூட்டிங் விரைவில் முடிவடைந்து படத்தின் வெளியீடு சீக்கிரமாகவே இருக்கும் என்றும், படத்தின் டீசரை அல்லு அர்ஜுனின் பிறந்தநாளான ஏப்ரல் 8ஆம் தேதி வெளியிட படக்குழு திட்டமிட்டிருந்ததாகவும் கூறப்பட்டது.

ஆனால் புஷ்பா 2 படம் குறித்த சமீபத்திய தகவல் ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. அதாவது புஷ்பா 2 படத்தில் இதுவரை எடுக்கப்பட்ட காட்சிகளை இயக்குநர் சுகுமார் போட்டுப் பார்த்ததாகவும் அது அவருக்கு திருப்தி அளிக்காததால் மேற்கொண்டு நடக்கவிருந்த ஷூட்டிங்கை கேன்சல் செய்துவிட்டார் எனவும் தகவல் வெளியாகியுள்ளது. 


அதுமட்டுமின்றி இதுவரை எடுக்கப்பட்ட காட்சிகளை அழித்துவிட்டு மீண்டும் முதலில் இருந்து அவர் ஷூட்டிங்கை தொடங்க திட்டமிட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.இதற்கிடையே புஷ்பா 2 திரைப்படத்தில் சாய் பல்லவி நடிக்க கமிட்டாகியிருக்கிறார் என தகவல்கள் வெளியாகின. ஆனால் கவர்ச்சி நடனம் ஆடுவதற்கு சாய் பல்லவி கமிட்டாகவில்லை எனவும், படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கவிருப்பதாகவும் கூறப்படுகிறது.


Advertisement

Advertisement