• Jul 26 2025

முதலமைச்சரின் செயலால் பெருமிதத்தில் 'The Elephant Whisperers' பட இயக்குநர்.. வைரலாகும் பதிவு..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

95 ஆவது ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில் சிறந்த ஆவண குறும்படத்துக்கான விருதை  இந்தியாவின் The Elephant Whisperers என்ற படம் வென்றுள்ளது. யானை கூட்டத்தால் கைவிடப்பட்ட குட்டியானைகளின் வாழ்வியலையும், இத்தகைய யானைகளை பரமாரிக்கும் முதுமலை தெப்பக்காடு யானைகள் முகாமின் தம்பதிகளின் வாழ்க்கையையும் இப்படம் ஆனது மிகவும் தத்ரூபமாக காட்டியிருந்தது. 


இந்த நிலையில் யானைகளை பராமரிக்கும் யானை பராமரிப்பாளர் தம்பதிகளான பொம்மன் – பெள்ளியம்மா ஆகியோரை நேரில் வாழ்த்திய முதலமைச்சர் இருவருக்கும் கேடயங்களையும், சான்றிதழ்களையும் வழங்கியதோடு மட்டுமல்லாமல், பொன்னாடை போர்த்தி இருவரையும் கௌரவப்படுத்தியும் உள்ளார்.


தற்போது இந்த பதிவை குறிப்பிட்டு ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளார் இப்படத்தை இயக்கிய இயக்குநர் கார்த்திகி கோன்சால்வ்ஸ். அதாவது "பொம்மன் மற்றும் பெல்லியை நமது மாண்புமிகு முதலமைச்சர் கௌரவித்ததைக் கண்டு மிகுந்த மகிழ்ச்சியும் பெருமிதமும் அடைகிறேன். ‘தி எலிஃபண்ட் விஸ்பரர்ஸ்’ திரைப்படத்திற்குப் பிறகு 95வது அகாடமி விருதுகளில் சுதந்திரத் திரைப்படத்திற்காக இந்தியாவிற்கான முதல் அகாடமி விருதை வென்றது" எனப் பெருமையுடன் இப்பதிவில் குறிப்பிட்டுள்ளார்


Advertisement

Advertisement