• Jul 26 2025

தவறான பற்சிகிச்சையினால் கொடூரமாக மாறிய பிரபல நடிகையின் முகம்-அதிர்ச்சியில் ரசிகர்கள்

stella / 3 years ago

Advertisement

Listen News!

பெங்களூர் மாநிலத்தை சேர்ந்தவர் நடிகை சுவாதி சதீஷ். இவர் எஃப்.ஐ.ஆர்., 6 to 6 உள்பட பல படங்களில் நடித்திருக்கிறார். இவருக்கு மூன்று வாரத்திற்கு முன்பாக பல் வலி ஏற்பட்டுள்ளது இதைத்தொடர்ந்து தனியார் மருத்துவமனையை அணுகி உள்ளார். அங்கு அவருக்கு ரூட்கேனல் முறையில் சிகிச்சை அளிக்கப்பட்டு இருந்தது.

அதன் பின்னர் முகம் வீங்கி காணப்பட்ட சுவாதி இந்த வீக்கம் எப்போது குறையும் என்று மருத்துவர்களிடம் கேட்டுள்ளார். அதற்கு அவர்கள் இரண்டு மூன்று நாட்களில் குறைந்துவிடும் என்று கூறியுள்ளார்கள்.

ஆனால் மூன்று வாரங்கள் கடந்துள்ள நிலையில் சுவாதிக்கு வீக்கம் குறையவில்லை தற்போது அவரை பார்த்தவுடன் இவர் சுவாதி தானா? என்று சந்தேகம் ஏற்படுமளவுக்கு முகத்தோற்றம் மாறியது.

இதுபற்றி மருத்துவமனையில் கேட்டபோது சரியான தகவல்களை அளிப்பதில்லை என்று சுவாதி குற்றம்சாட்டியுள்ளார். தற்போது அவர் வேறு மருத்துவமனையில் சிகிச்சை எடுத்து வருகிறார். தவறான மருந்து அளிக்கப்பட்டதால் முகத்தோற்றம் மாறி இருக்கக்கூடும் என்ற குற்றச்சாட்டு தற்போது பரவி வருகின்றது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement