• Sep 11 2025

மாப்பிள்ளை எங்க போனாரு...? எழில் மேல் சந்தேகத்தில் குடும்பம்... கடைசியில் கயல் காப்பாற்றப்படுவாரா..?

Prema / 2 years ago

Advertisement

Listen News!

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும்  பிரபல ஹிட் சீரியல்களில் ஒன்று 'கயல்'. மக்கள் மனம் கவர்ந்த இந்த சீரியலானது டிஆர்பி ரேட்டிங்கில் முதன்மையான ஒரு இடத்தைப் பிடித்திருக்கின்றது. இந்த சீரியலில் கயலுக்கும் எழிலுக்கும் திருமணம் நடைபெறுமா.? என்ற எதிர்பார்ப்பையும் மீறி, கயல் உயிர் பிழைப்பாரா..? என்ற எதிர்பார்ப்புத்தான் ரசிகர்கள் மத்தியில் அதிகம் நிலவி இருக்கின்றது.


தற்போது சிவசங்கரியின் சூழ்ச்சிக்கு ஏற்ப கயலைக் கடத்திய கௌதம் அவரைத் கயிறு கட்டித் தொங்கப் போட்டிருக்கின்றார். எழில் கயலைக் காணாது தேடி போகின்றார்.

இந்நிலையில் இன்றைய நாளுக்குரிய ப்ரோமோ வீடியோ வெளியாகி இருக்கின்றது. அதில் எழிலின் நண்பனிடம் "எங்கடா மாப்பிள்ளை, எங்களை ஏமாற்றி விட்டு அவர் எங்க போனாரு" எனக்கேட்டு வீட்டார் மிரட்டுகின்றனர்.


மறுபுறம் எழில் கயலைத் தேடிப் போகின்றார். அப்போது பெற்றோல் போடும் ஒருவரிடம் சென்று, கயலைக் கடத்திச் சென்ற காரிற்கு பெற்றோல் போட்டவரின் மொபைல் நம்பர் வாங்கி அவர்களுக்கு போன் பண்ணுகின்றார். இவ்வாறாக இந்தப் ப்ரோமோ வெளிவந்துள்ளது.


இதனைத் தொடர்ந்து எழில் கயல் இருக்கும் இடத்திற்குச் சென்று அவரைக் காப்பாற்றுவாரா..? இல்லையா..? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Advertisement

Advertisement