• Jul 25 2025

மூர்த்தியைக் கண்டவுடன் பதறி அடித்து தப்பி ஓடும் குடும்பத்தினர்- கடுப்பாகி திட்டிய தனம்- இனி நடக்கப் போவது இது தானா?

stella / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ். அந்த வகையில் இந்த சீரியலில் இன்றைய தினம் என்ன நடக்கவுள்ளது என்று பார்ப்போம்.அதாவது வீட்டிற்கு வந்த தனத்தின் அம்மாவும் அண்ணியும் தனத்திடம் நலம் விசாரிக்கின்றார்கள். பின்னர் கர்ப்பமாக இருப்பதை வீட்டில இருப்பவர்களுக்கு சொல்லலாம் தானே என பேசுகின்றார்.இருப்பினும் தனம் ஏதேதோ காரணங்கள் சொல்லி அதனை மறுத்து விடுகின்றார்.

பின்னர் சாப்பாட்டுக் கடையில் மூர்த்தி ,ஜுவா, கதிர் ஆகியோர் இருந்து சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது மூர்த்தி தன்னை அறியாமல் தனம் கர்ப்பமாக இருப்பதை நினைத்து நினைத்து சிரிக்கின்றார். இதனைப் பார்த்த ஜுவாவும் கதிரும் என்ன என்று விசாரிக்கின்றனர். ஆனால் மூர்த்தி சமாளித்து விட்டு அந்த இடத்தை விட்டு எழும்பிச் சென்று விடுகின்றார்.


பின்னர் வழமை போல எல்லோரையும் வைத்து கதை கதையாக சொல்லுகின்றார். ஆனால் தனம் கர்ப்பமாக இருப்பதை மட்டும் சொல்லவே இல்லை. இதனால் எல்லோரும் கதையை கேட்டு உறங்கி விடுகின்றனர். பின்னர் மீண்டும்  காலையில் மூர்த்தி கதை கூற ஆரம்பிக்கின்றார். இதனால் எல்லோரும் மூர்த்தியிடம் இருந்து தப்பித்து ஓடி விடுகின்றனர்.


அதனால் கடுப்பான தனம் மூர்த்தியை திட்டுகின்றார். இதனால் மூர்த்தி என்ன செய்வது என்று தெரியாமல் முழிக்கின்றார். இத்துடன் இந்த எப்பிஷோட் முடிவடைவதைக் காணலாம்.

Advertisement

Advertisement