• Jul 23 2025

ஷுட்டிங் ஸ்பாட்டில் நடிகை சுனைனாவுக்கு டாச்சர் கொடுத்த பிரபல நடிகர்- இவரா இப்படி செய்தது?

stella / 2 years ago

Advertisement

Listen News!


 கடந்த 2005 ஆம் ஆண்டு தெலுங்கில் வெளிவந்த “குமார் VS குமாரி” என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமாகியவர் தான் சுனைனா. தொடர்ந்து தமிழில்  “காதலில் விழுந்தேன்” என்னும் திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகினார்.தொடர்ந்து மாசிலாமணி”, “வம்சம்”, “நீர் பறவை”, “சில்லுக் கருப்பட்டி” போன்ற திரைப்படங்களில் நடித்தார். 

 தற்போது “ரெஜினா” என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இத்திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் உருவாகி வருகிறது. இந்த நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்துகொண்ட சுனைனா, நடிகர் நகுல் குறித்து ஒரு சம்பவத்தை பகிர்ந்துகொண்டுள்ளார். 


அதாவது “காதலில் விழுந்தேன்”, “மாசிலாமணி” ஆகிய திரைப்படங்களில் நடிக்கும்போது எனக்கு 17 வயது இருக்கும். அப்போதெல்லாம் எனக்கு தமிழ் தெரியாது. மிகவும் அமைதியாகவே இருப்பேன். செட்டில் யாரிடமும் பேசமாட்டேன்.


ஆனால் நகுல் என்னிடம் வந்து பேசிக்கொண்டே இருப்பார். நான் மௌனத்தை கலைத்துவிட்டு கலகலவென பேசவேண்டும் என்று அவர் முயன்றுகொண்டே இருந்தார். அவர் Irritate செய்தார் என்று சொல்லமுடியாது. ஆனால் நான் எனது மௌனத்தை உடைத்துக்கொண்டு வெளியே வரவேண்டும் என நினைத்து அவ்வாறு செய்தார்” என்று அப்பேட்டியில் சுனைனா கூறியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement