• Jul 24 2025

தமன்னாவை ப்ரொபோஸ் செய்த பிரபல நடிகர்... டேட்டிங் போக வேற கேட்டிருக்காரே..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் பல்லாயிரக்கணக்கான ரசிகர்களின் மனங்களைக் கொள்ளை கொண்ட பெண் நட்சத்திரங்களில் ஒருவராகத் திகழ்ந்து வருபவர் நடிகை தமன்னா. இவரின் நடிப்பிலும், அழகிலும் மயங்காத இளைஞர்களே இல்லை என்று கூறலாம்.


இவர் தனது சினிமாப் பயணத்தின் ஆரம்பத்தில் 'கேடி, வியாபாரி, கல்லூரி' போன்ற சிறு பட்ஜெட் படங்களில் மட்டுமே கதாநாயகியாக நடித்து வந்தார். பின்னர் தென்னிந்திய சினிமாவில் நடிக்க ஆரம்பித்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று முன்னணி நடிகையாக உயர்ந்தார்.


மேலும் ஆரம்பத்தில் அடக்கவொடுக்கமாக நடித்து வந்த தமன்னா கிளாமரில் பட்டையை கிளப்பி நடிக்க ஆரம்பித்தார். இவ்வாறாக முன்னணி நடிகர்கள் படங்களில் மட்டுமே நடித்த தமன்னா தற்போது பாலிவுட் பக்கம் வரை சென்று அங்கும் கொடிக்கட்டி பறந்து வருகிறார். அதுமட்டுமல்லாது சமீபத்தில் 'பிளான் ஏ பிளான் பி' என்ற படத்தில் ரித்தேஷுடன் படுக்கையறை காட்சியில் நடித்து ஷாக் கொடுத்தார். 


இந்நிலையில் தெலுங்கில் 'Gurthunda Seethakalam' என்ற படத்தில் நடித்துள்ளார் தமன்னா. வரும் 9ஆம் தேதி ரிலீசாகவுள்ள நிலையில் இப்படத்தின் உடைய பிரஸ் மீட் நிகழ்ச்சி சமீபத்தில் நடந்துள்ளது. அப்போது அப்படத்தின் கதாநாயகன் நடிகர் Adivi Sesh தமன்னாவை பிரபோஸ் செய்துள்ளதாக கூறப்படுகின்றது. அதாவது "நீங்க மில்கி நானும் சில்கி" என்று கூறி தமன்னாவை டேட்டிங் போக கேட்டுள்ளார்.

இந்த விடயமானது தற்போது சமூக வலைத்தளங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருகின்றது.

Advertisement

Advertisement