• Jul 26 2025

ஒரு மணி நேரத்தில் 28 கோடி ரூபாய் சம்பாதித்த பிரபல நடிகரின் மனைவி…அப்படி என்ன செய்தார் தெரியுமா..?ஆச்சர்யத்தில் ரசிகர்கள்..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

பாலிவுட் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக விளங்குபவர் நடிகர் ஜானி டெப். 'பைரேட்ஸ் ஆஃப் தி கரீபியன்' என்ற திரைப்படத்தில் 'கப்ரன் ஜாக் ஸ்பாரோ' என்ற பாத்திரத்தில் நடித்ததற்காக உலக அளவில் புகழ் பெற்றார். பல திரைப்படங்களில் நடித்து உலகளவில் புகழ் பெற்ற இவர் பல விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் கடந்த சில வருடங்களுக்கு முன்பு ஜானி டெப்புக்கும் அவரது இரண்டாவது மனைவி ஆம்பர் ஹெர்ட்டுக்கும் இடையே தகராறுகள் ஏற்பட்டன. இதனால் சமீபத்தில் இடம்பெற்ற பேட்டி ஒன்றில் ஆம்பர் ஹெர்ட் அவர்கள் "ஜானி டெப் ஒரு மோசமான பெண் பித்தர்" என்று சித்தரித்தார்.

இதனைத்தொடர்ந்து அவருக்கு எதிராக வழக்கு தொடர்ந்தார் ஜானி டெப். அந்த வழக்கு கிட்டத்தட்ட 4 ஆண்டுகள் நடைபெற்ற நிலையில், சமீபத்தில் ஜானி டெப்புக்கு சாதகமாகவும் ஆம்பர் ஹெர்ட்டுக்கு பாதகமாகவும் தீர்ப்பு வந்தது.

அத்தீர்ப்ப்பில் சுமார் 10 மில்லியன் டாலர்கள் அபராதமாக ஜானி டெப்புக்கு அவரது மனைவி ஆம்பர் ஹெர்ட் கொடுக்க வேண்டும் என கோர்ட் உத்தரவிட்ட நிலையில், தன்னிடம் அந்த அளவுக்கு பணமே இல்லை என கூறியுள்ளார். வழக்கின் வாயிலாகத் தன்னுடைய வாழ்க்கை திரும்பவும் கிடைத்து விட்டதாக மகிழ்ச்சியடைந்த ஜானி டெப் சமீபத்தில் தனது ஓவியங்களை இன்ஸ்டாகிராமில் விற்பனையிட்டார்.

விற்பனையிட்ட சில மணி நேரத்திலேயே 3 மில்லியன் ரூபாவுக்கு ஓவியங்கள் விற்பனை செய்யப்பட்டன. இது இலங்கை மதிப்பில் 28 கோடி ரூபாய் என்பது குறிப்பிடத்தக்கது. கேஸ்ட்டல் ஃபைன் ஆர்ட்ஸ் 37 கலரியின் 780 பிரிண்டுகளை வாங்கக் கூட்டம் அலைமோதிய நிலையில், ஒரே மணி நேரத்தில் இத்தனை கோடிகளை வசூல் செய்துள்ளமை ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

மேலும் 59 வயதாகும் ஜானி டெப் தனக்கு இருக்கும் ஓவியத் திறமையை இப்போது தான் இந்த அளவுக்கு வெளிப்படுத்தி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement