• Jul 25 2025

உன் மூஞ்சி அழகாகவே இல்லை.. சூர்யா பட நடிகரிடம் ஓப்பனாக சொன்ன பிரபல நடிகை..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

இந்தி மற்றும் தமிழ் படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகர் மனோஜ் பாஜ்பாய். அந்தவகையில் இவர் விஷாலின் சமர் படம் மூலம் தான் தமிழ் சினிமாவில் முதன்முதலில் காலடி எடுத்து வைத்தார். அதன் பின்னர் சூர்யாவுடன் இணைந்து அஞ்சான் படத்தில் நடித்தார். 


இதனையடுத்து அவர் எந்தவொரு தமிழ் படத்திலும் நடிக்கவில்லை. இருப்பினும் தொடர்ந்து இந்தி படங்களில் அதிக கவனம் செலுத்தி வருகின்றார். இந்நிலையில் சமீபத்தில் இடம்பெற்ற பேட்டி ஒன்றில் மனோஜ் பாஜ்பாய் கூறிய ஒரு விடயமானது அதிர்ச்சி அடைய வைத்திருக்கிறது. 


அதாவது "பிரபல நடிகை ஒருவர் என்னிடம் வந்து, மனோஜ் நீ பார்க்க அழகாக இல்லை என்று எனக்கு தோன்றுகிறது என்றார். ஆனால் அதற்கு நான் எந்தவொரு ரியாக்ட்டும் செய்யவில்லை. நம் சினிமாவில் ஹீரோக்களின் லுக்கை வைத்து தான் அழகான லுக் எது என்று பலராலும் கூறப்படுகிறது' என்றார்.


மேலும் தொடர்ந்து அவர் பேசுகையில் "இயக்குநர் ஷ்யாம் பெனகலுக்கு நான் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன். ஜுபைதாவில் என்னை நடிக்க வைக்க முடிவு செய்தார் அவர். ஏன் இப்படி செய்கிறீர்கள் என்று நான் அவரிடம் கேட்டேன். என்னை இளவரசனாக நடிக்க வைக்காதீர்கள். பார்ப்பதற்கு நான் இளவரசன் போன்று இல்லை என்று கூறினேன். ஆனால் அதை கேட்ட அவரோ, ஏன் இப்படி சொல்கிறாய் என்று கேட்டார். வாழ்க்கையில் எனக்கு நம்பிக்கை குறைவு. ஆனால் மேடையில் அதற்கு நேர் எதிர் என்றார்" எனவும் கூறியுள்ளார் நடிகர் மனோஜ் பாஜ்பாய்.


Advertisement

Advertisement