• Jul 25 2025

தனது முதலிரவுப் போட்டோவை பொதுவெளியில் வெளியிட்ட பிரபல நடிகை.. வைரலாகும் புகைப்படம்.. ஷாக்கில் ரசிகர்கள்.!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

தனுஷின் 'அம்பிகாவதி' என்ற படத்தில் நடித்து பிரபலமானவர் நடிகை ஸ்வரா பாஸ்கர். சினிமாவைப் போன்றே சமூக வலைதளங்களிலும் எப்போதும் ஆக்டிவாக உள்ள ஸ்வரா பாஸ்கர் அவ்வப்போது சர்ச்சைக்குரிய கருத்துகளைப் பதிவிட்டு ரசிகர்களின் கடும் விமர்சனங்களுக்கு ஆளாகி வருகிறார்.


இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது நீண்ட நாள் காதலரும் சமாஜ்வாதி கட்சியின் இளைஞரணி தலைவருமான ஃபஹத் அகமதுவை திருமணம் செய்துகொண்டார். இவர்களின் திருமண போட்டோக்கள் இணையத்தில் பெரும் வைரலாகி வந்தன.


இந்நிலையில் தற்போது தனது முதலிரவு போட்டோவை சமூக வலைதள பக்கத்தில் ஷேர் செய்துள்ளார் நடிகை ஸ்வரா பாஸ்கர். அதாவது தனது முதல் இரவுக்காக முதலிரவு அறையையும் படுக்கையையும் தனது அம்மா ரோஜா மலர்களால் அலங்கரித்துள்ளதாக ஸ்வரா பகிர்ந்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் பலரும் ஷாக்காகியுள்ளனர். மேலும் முதலிரவு அறையை கூட இப்படி வெட்ட வெளிச்சமாகவா காட்டுவீர்கள் என்று கேட்டு விளாசி வருகின்றனர்.


அதுமட்டுமல்லாது, இதையெல்லாம் நீங்க உலகத்திற்கு சொல்ல வேண்டிய அவசியம் இல்லை என்றும், அறையை அலங்கரித்தவருக்கு நன்றி சொல்ல வேண்டுமானால் நேரிலேயே பார்த்து சொல்லலாம், இதுபோன்ற பர்சனல் விஷயங்களை சமூக வலைத்தளங்களை கொண்டு வருவதால் உங்களை யாரும் பாராட்டப்போவதில்லை என்றும் அவரை சாடி வருகின்றனர்.


மேலும் திருமணம் ஆகி 40 நாட்களாக அதனை ரகசியமாக வைத்துவிட்டு இப்போது உங்க ஃபர்ஸ்ட் நைட் போட்டோக்களை ஏன் வெளியிடுகிறீர்கள் என்றும், தனது கணவரையே அண்ணன் என்று அழைத்த ஸ்வரா பாஸ்கர் இதுமட்டுமல்ல இன்னும் என்ன வேண்டுமானாலும் செய்வார் என்றும் நெட்டிசன்கள் விளாசி வருகின்றனர். 


எது எவ்வாறாயினும் ஸ்வரா பாஸ்கரின் முதல் இரவு போட்டோக்கள் தற்போது இணையத்தில் படு வைரலாகி வருகிறது.

Advertisement

Advertisement