• Jul 26 2025

ஆடையணியாமல் தெருவில் நடந்து வந்த பிரபல நடிகை.. உடனடியாக காவல் நிலையத்திற்கு கொண்டு சென்ற போலீஸ்.. பேரதிர்ச்சியில் ரசிகர்கள்..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

விளம்பர படங்கள் தனது திரைப்பயணத்தை தொடங்கி பின்னர் தொலைக்காட்சி சீரியல்கள், மேடை நாடகங்கள், படங்கள் என்று படுபிசியாக நடித்து வந்தவர் நடிகை அமாண்டா பைன்ஸ்.


இவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஆடை எதுவும் அணியாமல் லாஸ் ஏஞ்சல்ஸ் நகர வீதிகளில் தனியாக நடந்து சென்றிருக்கிறார். அந்த சமயத்தில் தெருவில் வந்த கார் ஒன்றை நிறுத்தி, தனக்கு மனநல பிரச்சனை மீண்டும் ஏற்படுவது போன்று இருப்பதாக தெரிவித்துள்ளார். 

இதனையடுத்துப் பின்னர் அவரே 911 எண்ணுக்கு போன் செய்து அவர்களிடம் உதவி கேட்டிருக்கிறார். பின்பு போலீசார் வந்து அமாண்டாவை உடனடியாக காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றார்கள். அங்கு அமெண்டாவை பரிசோதனை செய்த மனநல நிபுணர்கள் உடனே அமாண்டாவை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லுமாறு கூறினார்கள். 


இதனால் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் அமாண்டா. அங்கு அவர் மனநல மருத்துவர்களின் கண்காணிப்பின் கீழ் இருந்து வருகின்றார். அதுமட்டுமல்லாது இன்னும் சில நாட்களுக்கு அமாண்டா மருத்துவமனையில் தான் இருப்பார் என்றும் கூறப்படுகின்றது.

மேலும் அமாண்டாவுக்கு பைபோலார் டிஸ்ஆர்டர் இருப்பதாகவும் கூறப்படுகின்றது. இதுபோன்றே அமாண்டாவுக்கு இதற்கு முன்னரும் மனநல பிரச்சனையும், போதைப் பொருள் பயன்பாட்டு பிரச்சனையும் இருந்தது. 

இதனைத் தொடர்ந்து கடந்த 2013-ஆம் ஆண்டு கன்சர்வேட்டர்ஷிப்பில் வைக்கப்பட்டார் அமாண்டா. பின்பு கடந்த ஆண்டு தான் அவர் கன்சர்வேட்டர்ஷிப்பில் இருந்து விடுவிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. எது எவ்வாறாயினும் ஒரு நடிகை உடை எதுவும் அணியாமல் சாலையில் சென்றமை ரசிகர்கள் மத்தியில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

Advertisement