• Jul 25 2025

தி லெஜண்ட் பட ஹீரோயினை வச்சு செய்யும் பிரபல கிரிக்கெட் வீரர்-எல்லாம் அந்த விஷயம் தான் காரணமாம்

stella / 2 years ago

Advertisement

Listen News!

பாலிவுட் நடிகையான ஊர்வசி ரவுத்தேலா தி லெஜண்ட் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகினார்.இவர் கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட் நெருக்கமாக இருந்ததாகவும் சில பிரச்சனைகள் காரணமாக அவரை வாட்ஸ்அப்பில் இருந்து பிளாக் செய்து விட்டார் என்றும் கடந்த 2018ம் ஆண்டு தகவல்கள் பரவின.

இதனால் இருவருக்கும் இடையில் அடிக்கடி மோதல் ஏற்பட்டு வருகின்றது. சமீபத்தில் மீடியா ஒன்றுக்கு பேட்டியளித்த ஊர்வசி ரவுத்தேலா, ஹோட்டல் லாபியில் என்னை பார்க்க ஒருத்தன் ரொம்ப நேரம் வெயிட் பண்ணான் என்கிற விஷயத்தை ஓப்பன் செய்ய, அந்த பேட்டி தற்போது டிரெண்டாகி வருகிறது.

அதில், ரிஷப் பண்ட் பெயரை அவர் ரிவீல் செய்யவில்லை என்றாலும், ரசிகர்கள் ரிஷப் பண்ட் தான் என கமெண்ட் போட்டு தாக்கினர். கடுப்பான ரிஷப் பண்ட்டும் அதற்கு எதிர்வினையாக பேசியது பரபரப்பை கிளப்பி உள்ளது.

பிரபலமாக வேண்டும் என்பதற்காக இஷ்டத்துக்கு சிலர் மீடியாவில் பொய் சொல்லி வருகின்றனர் என கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கோபத்தை கொட்ட, ஊர்வசி ரவுத்தேலாவின் பேட்டி ரிஷப் பந்தை அந்த அளவுக்கு பாதித்துள்ளது என்றும், இப்பவும் ஊர்வசியின் பேட்டிகளை தேடித் தேடிப் போய் பார்த்து வருகிறாரா ரிஷப் என நெட்டிசன்கள் ட்ரோல் செய்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement