• Jul 24 2025

ஜ போன் வாங்கி கொடுத்த பிரபல தயாரிப்பாளர்- பூஜை அறையில் புகைப்படத்தை வைத்து கும்பிடும் கூல் சுரேஸ்..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

சிம்புவின்  நடிப்பில் அண்மையில் வெளிவந்த திரைப்படம் வெந்து தணிந்தது காடு. இப்படம் ரசிகர் மத்தியில்  மாபெரும் வெற்றி பெற்றுள்ளது.

இப்படத்தின் தலைப்பை ஒவ்வொரு படத்தின் விமர்சனத்தின் போது சொல்லிக்கொண்டே இருந்தவர்  தான் நடிகர் கூல் சுரேஷ்.

திரையரங்கிற்கு வெளியே படம் பார்த்து வந்தவுடன், ' வெந்து தணிந்தது காடு படத்துக்கு வணக்கத்த போடு' என்று இவர் சொல்வதை காணவே ரசிகர்கள்  பெரும் ஆவலுடன் காத்திருப்பார்கள்.



மேலும்  அப்படி வெந்து தணிந்தது காடு படத்தை மூலைமுடுக்கெங்கும் கொண்டு சேர்ந்தவர்களில் ஒருவர் கூல் சுரேஷ்.இந்நிலையில் பிரபல தயாரிப்பாளர்  ஜசரி கணேஷ் வெந்து தணிந்தது காடு திரைப்படம் நல்ல வரவேற்ப்பை எட்டிய நிலையில் இயக்குநர்  கௌதம் மேனனுக்கு புல்லட்டும்  நடிகர் சிம்புவிற்கு சொகுசு காரும் பரிசளித்த நிலையில் கூல்சுரேசிற்கு ஜ போன் வாங்கி கொடுத்துள்ளார்.அது மட்டுமல்லாது அவரின் பிள்ளைகளின் முழு படிப்புச் செலவையும் ஏற்றுக்கொண்டுள்ளார்.


இதற்கு நன்றி தெரிவித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் கூல் சுரேஸ்.அதாவது நீங்கள் எனக்கு தெய்வம் மாதிரி உங்களை நான் எனிமேல் பூஜை அறையில் வைத்து கும்பிடுவேன் எனக் கூறி புகைப்படத்தை வைத்துள்ளார்.அத்தோடு ரசிகர்கள் பலரும் கூல் சுரேஷிற்கு கிப்ற் வாங்கி கொடுங்கள் என கேட்டார்கள்.


ஆனால் தற்போது தனக்கு ஜசரி கணேஷ் சேர் கிப்ற் வாங்கி தந்துள்ளார்.என்னுடைய அன்பான ரசிகர்கள் பலரும் எனது தலைவன் சிம்புவின் படத்தை வெற்றி பெறச் செய்ததிற்கு நன்றி எனவும் தெரிவித்துள்ளார்.




Advertisement

Advertisement