• Jul 24 2025

மீண்டும் நிறுத்தப்பட்ட பிரபல சீரியல் நடிகையின் திருமணம்- இதுக்கா இவ்வளவு பில்டப் பண்ணினீங்க?

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சின்னத்திரை ஒவ்வொன்றிலும் பல்வேறு தொலைக்காட்சி ஒவ்வொன்றிலும் பல்வேறு சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகின்றது. அந்த வகையில் விஜய் டிவியில் நான் பிரைம் டைம்மில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் தான் காற்றுக்கென்ன வேலி சீரியல். இந்த சீரியலுக்கென்று ஏராளமான ரசிகர்கள் இருக்கின்றனர்.

இந்த சீரியலின் கதைப்படி, ஹீரோயின் அவருக்கு நடக்கவிருந்த கல்யாணத்தில் இருந்து தப்பித்து ஓடி வந்து அவர் ஆசைப்பட்ட கனவை நிறைவேற்றுவது தான் கதை.அப்படி அவர் படிக்க வரும் போது கல்லூரியில் பணியாற்றும் பேராசிரியருடன் காதல் ஏற்படுகிறது. 


அதைத் தொடர்ந்து இருவருக்கும் திருமணம் நடக்குமா? நடக்காதா? என்று கிட்ட தட்ட இரு வருடங்களாக சென்றுக் கொண்டிருந்தது. இப்போது தான் சூர்யா-விற்கும், வெண்ணிலா-விற்கும் மேரேஜ் ட்ராக் வந்தது.

கிட்ட தட்ட வெண்ணிலா-வுக்கு இரண்டு, மூன்று முறை மணமேடை வரை வந்து திருமணம் நின்றுப் போனது போல் காமிக்க, இம்முறை நிச்சயம் இந்த திருமணம் நடக்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் இன்றைய எபிசோடில் மறுபடியும் திருமணத்தை நிறுத்தியுள்ளனர்.


வெண்ணிலா-வின் அப்பா-வை சூர்யா-வின் பெரியம்மா அவமானப்படுத்த, சூர்யா வெண்ணிலா-வுக்கு சப்போர்ட் செய்யாமல் அமைதியாக நின்றது ரசிகர்களுக்கே சற்று எரிச்சலாகத்தான் இருந்தது. அதனால் வெண்ணிலா இந்த திருமணத்தை நிறுத்தி விட்டு சென்று விட்டார். ஆனால் இதில் வெண்ணிலா செய்தது தான் சரி என்று பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

மேலும் சூர்யாவுக்கு இன்னும் 1 மாதத்தில் திருமணம் செய்து வைக்க போகின்றேன் என அவருடைய பெரியம்மா சபதம் போட்டு விட்டார் இதனால் அடுத்து என்ன நடக்கப் போகின்றது என்பதை அறிய ரசிகர்கள் ஆவலாக உள்ளதும் குறிப்பிடத்தக்கது.




Advertisement

Advertisement