• Jul 26 2025

பெண் பத்திரிகையாளரை ஆபாசமாக திட்டிய பிரபல நடிகருக்கு நேர்ந்த கதி..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

பிரபல மலையாள நடிகர் ஸ்ரீநாத் பாசி மீது போலீசார் வழக்கு பதிவு செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அதாவது மலையாள யூடியூப் சேனலை சேர்ந்த பெண் பத்திரிகையாளரை ஆபாசமாக பேசி மிரட்டிய குற்றச்சாட்டில், பிரபல மலையாள இளம் நடிகர் ஸ்ரீநாத் பாசி மீது கேரள போலீசார் வழக்கு பதிவு செய்தனர். 

மலையாள சினிமாவில் முன்னணி இளம் நடிகர்களில் ஒருவர் ஸ்ரீநாத் பாசி. இவர் முதன் முதலாக நாயகனாக நடித்த சட்டம்பி என்ற படம் நேற்று முன்தினம் வெளியானது.



மேலும்  இவர்  ஒரு மலையாள யூடியூப் சேனலுக்கு பேட்டி கொடுத்தார். அந்த சேனலை சேர்ந்த பெண் பத்திரிகையாளர் பேட்டி எடுத்தார்.

அப்போது, அந்த பெண் பத்திரிகையாளர் கேட்ட ஒரு கேள்வி பாசிக்கு பிடிக்கவில்லை. திடீரென கோபப்பட்ட அவர் உடனடியாக கேமராவை ஆப் செய்யும்படி கூறினார்.அத்தோடு  பெண் பத்திரிகையாளரை ஆபாசமாக திட்டி, மிரட்டியதாக கூறப்படுகிறது. இது பற்றி அந்த பெண், போலீசில் புகார் செய்தார். அதன் பேரில், பாசி மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.



உஸ்தாத் ஹொட்டல் கும்பளங்கி நைட்ஸ் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.



Advertisement

Advertisement