• Jul 24 2025

வசூலில் அடித்து தும்சம் செய்யும் மாமன்னன்..! படம் வெளியாகி இத்தனை நாட்களில் எவ்வளவு கலெக்ஷன் செய்துள்ளது தெரியுமா?

stella / 2 years ago

Advertisement

Listen News!

மாரி செல்வராஜ் - உதயநிதி கூட்டணியில் உருவான மாமன்னன் திரைப்படம் கடந்த 29ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இதுதான் உதயநிதியின் கடைசிப் படம் என சொல்லப்பட்டாலும், 3 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் நடிக்க வந்தாலும் வருவேன் என அவரே கூறியிருந்தார். மாமன்னன் படத்தில் உதயநிதியுடன் கீர்த்தி சுரேஷ், வடிவேலு, ஃபஹத் பாசில், லால் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.

 இந்தப் படத்தில் வடிவேலுவின் கேரக்டரும் ரசிகர்களிடம் அதிக கவனம் ஈர்த்துள்ளது. இதுவரை காமெடியில் மட்டுமே கலக்கி வந்த வடிவேலு, முதன்முறையாக இப்படத்தில் மாமன்னன் என்ற சீரியஸான கேரக்டரில் நடித்திருந்தார். சமூக நீதியை பின்னணியாக வைத்து தனது வழக்கமான அடையாள அரசியல் கதைகளத்தில் மாமன்னன் படத்தை இயக்கியிருந்தார் மாரி செல்வராஜ். 


இதனால், இந்தப் படம் அதிக எதிர்பார்ப்புடன் வெளியானது.இதனிடையே மாரி செல்வராஜ்ஜுக்கு மினி கூப்பர் கார், மாமன்னன் படக்குழுவினருக்கு ஏராளமான பரிசுகளை கொடுத்து அசரடித்தார் உதயநிதி. இதன் தொடர்ச்சியாக பத்திரிகையாளர்களை அழைத்து மாமன்னன் சக்சஸ் மீட்டிங்கும் நடத்தி முடித்தார்.


தமிழகம் மட்டுமின்றில் உலகளவிலும் வசூலில் பட்டையை கிளப்பி வரும் மாமன்னன் திரைப்படம் இதுவரை எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது.அதன்படி, மாமன்னன் திரைப்படம் இதுவரை ரூ. 60 கோடிக்கும் மேல் வசூல் செய்து பாக்ஸ் ஆபிஸில் வசூல் வேட்டை நடத்தி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. 



Advertisement

Advertisement