• Jul 26 2025

விட்டுட்டு ஓடிப்போன அப்பா...இறந்த அக்கா...சுஜா வாழ்க்கையில் இவ்வளவு சோகமா..?

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்ற மொழிகளில் படங்கள் நடித்தவர் தான் நடிகை சுஜா வருணி. இவர் 2002ம் ஆண்டு ப்ளஸ் 2 என்ற படம் மூலம் அறிமுகமாகி  நிறைய சிறப்பு தோற்றத்தில் தான் நடித்துள்ளார்.

 துணை நாயகியாக சில படங்களே நடித்திருக்கிறார், எனவே சினிமாவில் அவ்வளவு பெரிய ரீச் இல்லை. ஆனால் பிக்பாஸ் முதல் சீசனில் கலந்துகொண்ட பின்னர் சுஜா வருணியை தெரியாத ரசிகர்களே இல்லை என்ற அளவிற்கு பிரபலம் ஆனார். 



இந்நிலையில் தற்போது தனியார் ஊடகம் ஒன்றிற்கு பேட்டி ஒன்றை கொடுத்துள்ளார்.

அதாவது இவரின் சிறுவயதிலே இவரது அப்பா இவரின் அம்மாவிற்கு மூன்றும் பெண் பிள்ளைகள் இருந்ததால் தனக்கு ஆண்பிள்ளை வரவேண்டும் என்று கூறிவிட்டு சென்று விட்டாராம்.



சிறுவயதில் இருந்து கஸ்ரப்பட்டு தனது அக்காவிற்கு திருமணம் செய்து வைத்தார்களாம்.ஆனால் அக்காவின் கணவரால் அக்கா தனது உயிரை மாய்த்துக்கொண்டாராம்.அதில் இருந்து ஜீன்ஸ் பான்ட் போட்டு யாரைக் கண்டாலும் தனக்கு பிடிக்காதாம் என தெரிவித்துள்ளார்.அத்தோடு குடும்பை வறுமை காரணமாகத் தான் தான் திரையுலகிற்கே வந்ததாகவும் கூறியுள்ளார்.


அதன் பிறகு தான் தன்னுடைய கணவரைப்பார்த்து தான் ஆண்கள் மேல கவுரவம் வந்தது.தற்போது நானே மாறிப்போய் இருக்கிறேன்.குழந்தை வந்த பின் சுஜாவாக மாறியுள்ளேன்.என கண்ணகலங்கி கூறியுள்ளார்.

Advertisement

Advertisement