• Jul 26 2025

வசுந்தராவுக்கும் ராகினிக்கும் இடையில் வெடித்த சண்டை- கடும் குழப்பத்தில் இருக்கும் அர்ஜுன் குடும்பம்- தமிழ் எடுத்த முடிவு

stella / 2 years ago

Advertisement

Listen News!


விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் தமிழும் சரஸ்வதியும். அந்த வகையில் இந்த சீரியலில் இன்றைய தினம் என்ன நடக்கவுள்ளது என்று பார்ப்போம்.

வசுந்தராவின் குழந்தையின் பெயர் சூட்டு விழாவின் நோட்டீஸை எல்லோரும் பார்க்கும் போது ராகினி, இது என்ன தமிழின்  பெயர் போட்டோ போட்டிருக்கு என்று கேட்க வசு, ஆமாம் நான் தான் போட்டேன். அவங்களால தான் என் குழந்தை நல்லபடியா பிறந்திச்சு அதனால தான் போட்டேன் .அவங்க கண்டிப்பா இங்க வரணும் என்று சொல்கின்றார்.


இதனால் கடுப்பான கார்த்திக் மற்றும் கோதை ஆகியோரும் வசுவைத் திட்ட வசு தமிழ் மாமாவும் சரஸ்வதியுமு் தானே என் கழந்தையோட பெரியம்மா பெரியப்பா யார் சொன்னாலும் நான் மாற மாட்டேன் அவங்க இங்க வந்தே ஆகனும் என்று சொல்லி விட்டு மேலே செல்கின்றார். வசு இப்படி அடம்பிடிப்பதைப் பார்த்த அர்ஜுன் குடும்பத்தினர் குழம்பிப் போகின்றனர்.

மேலே போன வசு இந்த விஷயத்தை சரஸ்வதிக்கு சொன்னதும் சரஸ்வதி தமிழிடம் சொல்ல இதெல்லாம் நாங்க சொல்லி தான் வசு செய்யிறானு வரப்போகுது நாம இந்த பங்சனுக்கு போகப் போறதில்லை என்று சரஸ்வதியிடம் சொல்ல சரஸ்வதியும் நமச்சியும் என்ன செய்வது என்று தெரியாமல் குழம்புகின்றனர்.


மேலும் அர்ஜுன் குடும்பம் இந்த பங்சனை எப்படியாவது நிறுத்தனும் என்று ராகினியைத் துாண்டி விடுகின்றனர். ராகினியும் கிழே வந்து தமிழும் சரஸ்வதியும் இந்த வீட்டுக்கு வந்தா நாங்க இந்த வீட்டை விட்டுப் போவோம் என்று சொல்ல வசு இது என் குழந்தை யார் வரணும் யார் வரக்கூடாது என்று நான் தான் முடிவு பண்ணனும் அவங்க ரெண்டு பேரும் வரல என்றால் இந்த பங்சன் நடக்காது என்று சொல்ல இருவருக்கும் இடையில் வாக்குவாதம் நிண்டு கொண்டே போகின்றது. இத்துடன் இன்றைய எப்பிஷோட் முடிவடைகின்றது.


Advertisement

Advertisement