• Jul 24 2025

பொன்னியின் செல்வன் படத்தின் சின்னஞ்சிறு நிலவே பாடலின் ஒரு நிமிட வீடியோவை வெளியிட்ட படக்குழு

stella / 2 years ago

Advertisement

Listen News!

முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டாம் பாகம் ஏப்ரல் 28ஆம் தேதி வெளியாகவிருக்கிறது. இதன் ட்ரெய்லர் மற்றும் ஆடியோ வெளியீட்டு விழா அண்மையில் சென்னையில் பிரமாண்டமாக நடந்தது. கமல் ஹாசன், சிம்பு, பாரதிராஜா, குஷ்பூ என ஏராளமானோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டனர். 

இதற்கிடையே சில நாள்களுக்கு முன்பு பொன்னியின் செல்வன் 2வில் இடம்பெற்றிருக்கும் சின்னஞ்சிறு நிலவே பாடலின் லிரிக்கல் வீடியோ வெளியானது. பாடலை இளங்கோ கிருஷ்ணன் எழுத ஹரிசரண் பாடியிருக்கிறார். இந்தப் பாடலானது நந்தினியையும், ஆதித்ய கரிகாலனையும் மையப்படுத்தி படத்தில் இடம்பெற்றிருக்கும் என்ற கருத்து ரசிகர்களிடையே எழுந்தது.


இந்நிலையில் சின்னஞ்சிறு நிலவே பாடலின் ஒரு நிமிட வீடியோவை படக்குழு இப்போது வெளியிட்டிருக்கிறது. நினைத்தபடியே இந்தப் பாடலானது நந்தினிக்கும், ஆதித்ய கரிகாலனுக்கும் உருவாக்கப்பட்டுள்ளது.


 பாடலின் காட்சிகளில் சிறு வயது நந்தினியும், சிறு வயது ஆதித்ய கரிகாலனும் தோன்றுகின்றனர். தெய்வ திருமகள் படத்தில் நடித்த பேபி சாரா சிறு வயது நந்தினியாக தோன்றியிருப்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இந்த ஒரு நிமிட வீடியோ ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.




Advertisement

Advertisement