• Jul 25 2025

வாரிசு படத்தில் குஷ்பூ நடித்த காட்சிகளை வெளியிடத் திட்டமிட்டுள்ள படக்குழு- அடடே இத்தனை நிமிடக் காட்சிகளா?

stella / 2 years ago

Advertisement

Listen News!

விஜய்யின் வாரிசு படம் கடந்த 11ம் தேதி ரிலீசாகி 5 நாட்களில் 150 கோடி ரூபாய் வசூலை தாண்டியுள்ளது. இதையொட்டி படக்குழு சென்னை ஈசிஆரில் சக்சஸ் மீட்டை நடத்தியுள்ளதாக தகவல்களி வெளியாகியுள்ளன. படத்தில் விஜய்யுடன் ராஷ்மிகா மந்தனா, பிரபு, சரத்குமார், ஜெயசுதா, ஷாம் உள்ளிட்ட நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது.

 பேமிலி சென்டிமெண்டை மையமாக வைத்து இந்தப் படத்தை பிரபல தெலுங்குப்பட இயக்குநர் வம்சி படிப்பள்ளி இயக்கியுள்ளார்.


படத்தில் விஜய் படத்திற்கேயுரிய ஆக்ஷன், காமெடி உள்ளிட்ட அம்சங்களும் வெகு சிறப்பாக பயன்படுத்தப்பட்டுள்ளன. மேலும் படத்தின் பாடல்களும் ரசிகர்களை வெகு சிறப்பாக ரசிகர்களை கவர்ந்துள்ளன.

படத்திற்கு இசையமைப்பாளர் தமன் இசையமைத்துள்ள நிலையில், ரஞ்சிதமே, தீ தளபதி உள்ளிட்ட பாடல்கள் ரசிகர்களை கவர்ந்து யூடியூவில் அதிகமான வியூஸ்கள் மற்றும் லைக்ஸ்களை பெற்றுள்ளன. படத்தில் நடிகர் விஜய் பாடல் காட்சிகளில் நடனத்தில் தெறிக்க விட்டுள்ளார். 


இந்தப் படத்தில் தான் நடிக்கவில்லை என்று ஆரம்பத்தில் குஷ்பூ பேட்டியொன்றில் தெரிவித்திருந்தார். ஆனால் ட்ரெயிலரில் அவரை காண முடிந்தது. இந்நிலையில் படம் தற்போது வெளியான நிலையில் அவரது போர்ஷன் அதிகமாக இல்லாத நிலையில், ரசிகர்கள் இதுகுறித்து கேள்வி எழுப்பி வருகின்றனர்.

இந்நிலையில் படத்தின் சக்சஸ் மீட்டில் பேசிய படத்தின் இயக்குநர் வம்சி படிப்பள்ளி, படத்தின் முதல் பாதியில் குஷ்பூவின் போர்ஷன் 17 நிமிடங்கள் இருந்ததாகவும் மிகவும் அழகான காட்சிகளாக அமைந்திருந்த அவை, படத்தின் நீளம் கருதி  நீக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார். விரைவில் டெலிட்டட் காட்சிகளாக அவை வெளியிடப்படும் என்றும் கூறியுள்ளார்.


Advertisement

Advertisement