• Jul 26 2025

நான்கு மொழிகளில் வெளியாகவுள்ள பிருந்தா மாஸ்டர் படத்தின் பர்ஸ்ட் லுக்..!

Aishu / 3 years ago

Advertisement

Listen News!

தமிழ், தெலுங்கு, இந்திப் படங்களில் முக்கியமான நடன இயக்குநராக வலம் வருபவர் தான் பிருந்தா. துல்கர் சல்மான், காஜல் அகர்வால் மற்றும் அதிதி ராவ் நடிப்பில் வெளியான ‘ஹே சினாமிகா’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர்.

மேலும் ஜியோ ஸ்டூடியோஸ் தயாரிப்பில் குளோபல் ஒன் ஸ்டூடியோஸ் இணைத் தயாரிப்பில், பிருந்தா இயக்கத்தில் ‘96’ புகழ் கோவிந்த் வசந்தா இசையில் வெளியான இப்படம் ரசிகர்களிடத்தே நல்ல வரவேற்பை பெற்றது.

எனினும் தற்போது பிருந்தா மாஸ்டர் தனது 2வது திரைப்படம் இயக்கத்தில் இறங்கிவிட்டார். ‘தக்ஸ்’ எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் சிம்ஹா, முனிஷ்காந்த், ஆர்.கே.சுரேஷ், ஹிருது ஹாரூன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
ஆக்‌ஷன் படமான இப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளது.

இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை விஜய் சேதுபதி, அனிருத், நிவின் பாலி, லோகேஷ் கனகராஜ், ராணா, ஐஸ்வர்யா ராஜேஷ், தேசிங் பெரியசாமி உள்ளிட்ட கோலிவுட் நட்சத்திரங்கள் வெளியிட்டனர்.

மேலும் படத்தின் கதை கன்னியாகுமரியில் உள்ள ஒரு சிலரது வாழ்க்கையைச் சுற்றி நடப்பதாக கூறப்படுகிறது. சாம் சிஎஸ் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement