• Jul 24 2025

முதன் முதலில் வெளியான அமுதவாணனின் மனைவி மற்றும் பிள்ளைகளின் புகைப்படம்...அட இவங்களா அவங்க..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

பிக்பாஸ் வீட்டில் அமுது என்று செல்லமாக அழைக்கப்படுவரே அமுதவாணன். இவர் ஒரு காமடியன், நடனகலைஞர், நடிகர் என்று சொல்லிக்கொண்டே போகலாம். 

இவர் கலக்கபோவது யாரு, சிரிச்சாபோச்சு, அது இது எது போன்ற நிகழ்ச்சிகளில் பங்குபற்றி இருந்தார், இவர் என்னதான் காமெடியனாக எல்லோரையும் சிரிக்க வைத்தாலும் இவரின் பின்னாலும் சோகமான சம்பவங்களும் உண்டு. தற்கொலைக்கும் கூட முயன்றுள்ளாராம்.

அமுதவாணன் மதுரையில் பிறந்துள்ளார், இவரது வீட்டில் மொத்தம் ஆறுபேர்  இதில் கடைசி பையன்தான் அமுதவாணன், இவர் தாயின் வயிற்றில் இருந்த போது இந்த குழந்தை வேண்டாம் என எண்ணி அவரது தாயார் கருக்கலைப்பு மருந்துகளை குடித்துள்ளார், இவ்வாறு கருக்கலைக்க முயற்சிப்பதும் ஒரு வகையான கொலை முயற்சிதான்.

அவ்வாறு இருந்தும் அதையெல்லாம் தாண்டி அமுதவாணன் பிறந்திருக்கின்றார்.இந்நிலையில் பிக்பாஸ் சீசன்-6 இல் 21 போட்டியாளர்களில் ஒருவராக கலந்து கொண்டு சிறப்பாக விளையாடி வருகின்றார்.தற்போது 9 போட்டியாளர்கள் மட்டுமே உள்ளார்கள்.



 பிக்பாஸ் வீட்டில் இருக்கும் போட்டியாளர்கள் தமது குடும்பத்தை பற்றி கூறிய நிலையிலும் எந்த ஒரு இடத்திலும் அமுதவாணன் தனது குடும்பத்தை பற்றி கூறாத நிலையில் கடிதம் எழுதும் டாஸ்கில் மட்டுமே அவர் கூறியிருந்தார்.

அதாவது அவரின் மனைவி புகைப்படமோ அவரது மகன்களின் புகைப்படமோ இதுவரை எந்த சமூகவலைத்தளத்திலும் எந்த நிகழ்ச்சியிலும் அமுதவாணன் காட்டவில்லை.

இவ்வாறுஇருக்கையில் இந்தவாரம் பிக்பாஸ் வீட்டில் ப்ரீஸ் ரிலீஸ் டாஸ்க் ஆரம்பமாகி உள்ளது.அதில் அமுதவாணனின் மனைவி மற்றும் பிள்ளைகள் வந்துள்ளனர்.அதில் அமுதவாணனின் மனைவி அவரை ஓடிவந்து கட்டி தழுவுகின்றார்.

இதோ அவர்களின் குடும்ப  புகைப்படம்...





Advertisement

Advertisement