• Jul 26 2025

6000 மாணவர்கள் இணைந்து வெளியிட்ட “ பருந்தாகுது ஊர் குருவி” பட முதல் சிங்கிள் பாடல்!

Jo / 2 years ago

Advertisement

Listen News!

6000 மாணவர்கள் மத்தியில்,  மாணவர்களின் உற்சாக கரவொலிகளுக்கு இடையில், மாணவர்கள் கைகளால் பருந்தாகுது ஊர் குருவி படத்தின் முதல் லிரிகல் பாடலான ‘மதயானைக்கூட்டம்’ பாடல் வெளியிடப்பட்டது. 

Lights On  Media  வழங்கும், இயக்குநர் தனபாலன் கோவிந்தராஜ் இயக்கத்தில், நிஷாந்த் ரூஷோ, விவேக் பிரசன்னா நடிப்பில் சர்வைவல் திரில்லராக உருவாகி இருக்கும் திரில்லர் படம் “பருந்தாகுது ஊர்க்குருவி”  இப்படத்தின் முதல் சிங்கிள் பாடலான மதயானைக்கூட்டம் பாடல் வித்தியாசமான முறையில் 6000 மாணவர்கள் மத்தியில், மாணவர்கள் கையால் வெளியிடப்பட்டது. 

சமீபத்தில் வெளியான இப்படத்தின் டீசர்  பெரும் ஆர்வத்தை ஏற்படுத்திய நிலையில் தற்போது வெளியாகியிருக்கும் மதயானைக்கூட்டம் பாடல் இணையம் முழுக்க ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.  

இசையமைப்பாளர் ரெஞ்சித் உண்ணி இசையில் அவரும் ராகுல் நம்பியாரும் இணைந்து பாடியுள்ள இப்பாடலை, பாடலாசிரியர் விதாகர் எழுதியுள்ளார். படத்தைப் பற்றிய ஒரு அறிமுகத்தைத் தரும் வகையில் உருவாக்கப்பட்டிருக்கும் இப்பாடல், படத்தின் மீதான ஆவலைத் தூண்டுவதாகவும் அமைந்துள்ளது. இணையம் முழுக்க வைரலாகி வரும் இப்பாடல் யூடூயுப் தளத்தில்  பெரும் பார்வை எண்ணிக்கைகளைப் பெற்று வருகிறது.

‘வஞ்சகமும் சூழ்ச்சியும் ஒரு போதும் நிலைக்காது...'  எனும் கருத்தில், திறமை மிகு இளைஞர்கள் குழுவின் முயற்சியில், பரபர திரில் பயணமாக உருவாகியுள்ள  படம் தான் “பருந்தாகுது ஊர் குருவி” படம் என்பது குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement