• Jul 25 2025

பிக்பாஸ் வீட்டிற்குள் கொடுக்கப்பட்ட முதல் டாஸ்க்- முதல் நாளிலேயே இப்படி அடிச்சுக்கிறாங்களே?- புது டுவிஸ்டாக இருக்கே

stella / 1 year ago

Advertisement

Listen News!

 விஜய் டிவியின் பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி சற்று முன் கோலாகலமாக தொடங்கியது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் போட்டியாளர்கள் யார் என்பதை தெரிந்துக் கொள்ள பிக் பாஸ் பிரியர்கள் அனைவரும் ஆவலுடன் தொலைக்காட்சி முன் அமர்ந்து இருக்கின்றனர்.

நிகழ்ச்சியின் ஆரம்பத்தில் கமல் ஹாசன் தனது வீட்டிலிருந்து பிக்பாஸ் செட்டுக்கு காரில் சென்றார். சிகப்பு கலர் கோட் சூட்டில் படு கலக்கலாக கமல் ஹாசன் பிக்பாஸ் செட்டுக்குள் எண்ட்ரி கொடுத்தார். அதே அந்த சமயத்தில் ரசிகர்களை கவரும்படியான ஒரு ஸ்க்ரிப்ட்டை பிக்பாஸ் குழுவினர் செய்திருந்தனர்.


அதன்படி பிக்பாஸ் இரண்டு வீடுகளும் ஒரே இடத்தில் பக்கத்து பக்கத்தில் அமைக்கப்பட்டிருக்கின்றன. இரண்டு வீடுகளுக்கும் ஒரே வாசல்தான் அமைக்கப்பட்டிருக்கிறது. அதேபோல் கன்ஃபெஷன் ரூம்கள் இரண்டு வீடுகளுக்கும் தனித்தனியாக கொடுக்கப்பட்டிருக்கின்றன. பாத்ரூம்கள் ஒரு வீட்டில் மட்டும் வைக்கப்பட்டிருக்கின்றன. அதேபோல் கிச்சனும் ஒன்றுதான் அமைக்கப்பட்டிருக்கிறது.


இப்படியிருந்த இந்த நிகழ்ச்சியில் முதலாவது போட்டியாளராக கூல் சுரேஷும் அவரைத் தொடர்ந்து பூர்ணிமா,அடுத்ததாக ரவீனா தாஹா, அடுத்ததாக டாடா பட நடிகர் பிரதீப் ஆகியோர் வீட்டிற்குள் சென்றுள்ளனர். மேலும் வீட்டிற்குள் கூல் சுரேஷ் சென்றவுடனேயே பிக்பாஸ் ஒரு டாஸ்க்கினைக் கொடுத்திருந்தார்.

அதாவது முதலாவதாக வந்த கூல் சுரேஷிற்கு தலைவர் பதவி கொடுக்கப்பட்டது. ஆனால் அவர் இரண்டாவதாக வரும் நபருடன் வாதிட வேண்டும்,அப்படி வாதிடும் போது யார் வெற்றி பெறுகின்றார்களோ அவர்களே தலைவர் என்று கூறப்பட்டது. அதன்படி கூல் சுரேஷிடமிருந்து பூர்ணிமா பெற்றுக் கொண்டார்.


பூர்ணிமாவிடமிருந்து ரவீனா பெற்றுக் கொண்டார்.ரவீனாவிடமிருந்து பிரதீப் பெற்றுக் கொண்டார். இப்போது பிரதீப் தான் வீட்டின் தலைவராக இருக்கின்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement