• Jul 24 2025

நான் நிஜமாக்கிய முதல் விஷயம்- எதிர்நீச்சல் ஜனனி வாங்கிய புதிய காரின் பெறுமதி எவ்வளவு தெரியுமா?

stella / 2 years ago

Advertisement

Listen News!

சின்னத்திரையாக இருந்தாலும் சரி, வெள்ளி திரையாக இருந்தாலும் சரி, அதில் நடிகர்கள் நடிக்கும் கேரக்டராகவே ரசிகர்களின் மனதில் பதிந்து விடுகிறார்கள் அதுபோல தான் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் ஜனனி கேரக்டரில் நடிக்கும் மதுமிதாவும் ரசிகர்களின் மனதில் இருந்து வருகிறார். 

இவர் பெங்களூருவை சேர்ந்தவர் .அங்கே தான் கன்னட நடிகையாக நான்கு வருடங்கள் தன்னுடைய நடிப்பு வாழ்க்கையை தொடங்கி இருக்கிறார். இந்த நிலையில் இவர் தமிழில் சீரியலில் நடிக்க வேண்டும் என்று அதிகமாக ஆர்வத்தோடு எதிர்பார்த்து இருந்தாராம்.


தமிழில் இவருக்கு முதல் முதலாக சன் டிவியில் அதுவும் எதிர்நீச்சல் சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைத்து இருக்கிறது. கிடைத்த வாய்ப்பில் தன்னுடைய திறமையை காட்டி தற்போது தமிழ் ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுவிட்டார்.

தற்போது நடிகை மதுமிதா ஒரு புது கார் வாங்கி இருக்கிறார். 'இது என் கனவு இல்லை, நான் நிஜமாக்கிய முதல் விஷயம்' என தெரிவித்து இருக்கிறார்.Kia Sonet ரக காரை தான் அவர் வாங்கி இருக்கிறார். அதன் விலை சுமார் 17 முதல் 18 லட்சம் ரூபாய் என்பது குறிப்பிடத்தக்கது. 




Advertisement

Advertisement