• Jul 26 2025

மாநாடு பட ஸ்டைலை போஃலோ பண்ணும் வெந்து தணிந்தது காடு திரைப்படக்குழு- ஓ இப்படி ஒரு விடயமும் இருக்கா?

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழில் முக்கிய நடிகரான சிம்பு நடிப்பில் இறுதியாக மாநாடு என்னும் திரைப்படம் வெளியாகியிருந்தது. இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து சிம்புவுக்கு படவாய்ப்புக்கள் குவிந்து வருவதோடு இவருடைய மார்க்கெட்டும் அதிகரித்துள்ளது.

அந்த வகையில் இவரது நடிப்பில் அடுத்ததாக உருவாகியுள்ள திரைப்படம் தான் 'வெந்து தணிந்தது காடு'. இப்படத்தை இயக்குநர் கௌதம் மேனன் இயக்கியுள்ளதோடு இப்படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக கயாடு லோகர் மற்றும் இட்னானி நடித்துள்ளனர்.

இசைப்புயல் ஏ ஆர் ரஹ்மான் இசையமைப்பில் உருவாகியுள்ள இப்படத்தை வெல்ஸ் இன்டர் நேசனல் சார்பில் ஐசரி கணேசன் தயாரிக்கிறார். இப்படம் வரும் செப்டம்பர் 15 தேதி ரிலீஸாகவுள்ளது.

இப்படத்தை தமிழகத்தில் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிட உள்ளது. இந்நிலையில் இந்த படத்தின் டப்பிங் பணிகள் நடந்துவரும் நிலையில் தன் சம்மந்தப்பட்ட காட்சிகளுக்கான டப்பிங்கை பேசி முடித்துள்ளார் சிம்பு.

இந்த நிலையில், மாநாடு படத்தில் சிங்கில் ஷாட் எடுக்கப்பட்டதைப் போன்று ‘வெந்து தணிந்தது காடு ‘படத்தில் சிங்கிள் ஷாட்டில் எடுக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement