• Jul 25 2025

முக்கிய பிரபலங்களைத் தொடர்ந்து வடிவேலுவின் தாயாரின் இறப்பிற்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்திய முன்னாள் மத்திய அமைச்சர்

stella / 2 years ago

Advertisement

Listen News!


தமிழ் சினிமாவில் காமெடியில் உச்ச நட்சத்திரமாக விளங்கும் நடிகர் வடிவேலுவின் தாயார்  உடல் நலக்குறைவு காரணமாக நேற்றிரவு மரணமடைந்தார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.87 வயதாகும் இவர் வயது மூப்பு காரணமாகவே இறபபுக்குள்ளானதாக கூறப்படுகின்றது.

தனியார் மருத்துவமனையில் சளி தொந்தரவு காரணமாக   சிகிச்சை பெற்றுவந்த தனது தாயார்  பொங்கல் வரையிலும் ஆரோக்கியமாகவே இருந்ததாக வடிவேலு தெரிவித்திருக்கிறார் வடிவேலு. தமிழக முதல்வர் ஸ்டாலின், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, பூச்சி முருகன் உள்ளிட்டோர் போன் மூலம் தொடர்புகொண்டு ஆறுதல் கூறியதாகவும் வடிவேலு தெரிவித்திருக்கிறார்.


நடிகர் வடிவேலு அவர்களின் தாயார்  மறைவையொட்டி, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களின் இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளார். அதில் நடிகர் வடிவேலு அவர்களின் அன்புத்தாயார்  மதுரை விரகனூரில் உடல்நலக்குறைவு காரணமாக இயற்கை எய்தினார் என்ற செய்தி அறிந்து மிகவும் வருத்தமுற்றேன். ஆளாக்கி அழகு பார்த்த அன்னையின் மறைவு என்பது எந்த ஒரு மகனுக்கும் ஈடுசெய்ய இயலாதஇழப்பாகும். 'வைகைப் புயல்' திரு. வடிவேலு அவர்களுக்கும் அவர்தம் குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன். என தமிழக முதல்வர் ஸ்டாலின் இரங்கல் அறிக்கை வெளியிட்டுள்ளார்.


இந்நிலையில் முன்னாள் மத்திய அமைச்சர் மு.க. அழகிரி, வடிவேலு வீட்டிற்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தி உள்ளார். அவருடன் மதுரை முன்னாள் துணை மேயர் மன்னன் உடன் சென்றுள்ளார். அழகிரியின் காலில் விழுந்து வணங்கிய வடிவேலு, தனது தாயாரின் உடல் வைக்கப்பட்டிருந்த அறைக்கு அழகிரியை அழைத்துச் சென்றார். அங்கு அழகிரி & அவரது ஆதரவாளர்கள் வடிவேலுவின் தாயாருக்கு அஞ்சலி செலுத்தியுள்ளார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.




Advertisement

Advertisement