• Jul 25 2025

பிரமாண்டமாக நடந்த சித்தார்த் மல்ஹோத்ரா -கியாரா அத்வானி வெட்டிங் -அடடே இத்தனை வகையான உணவு வழங்கப்பட்டதா?

stella / 2 years ago

Advertisement

Listen News!

தோனியின் வாழ்க்கை வரலாறு படத்தில், சாக்ஷி கதாபாத்திரத்தில் நடித்து மிகவும் பிரபலமானவர் கியாரா அத்வானி. தற்போது தெலுங்கு மற்றும் பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகையாக இருக்கும் இவர், Shershaah என்கிற படத்தில் சித்தார்த் மல்ஹோத்ராவுடன் இணைந்து நடித்த போது இருவருக்கும் இடையே காதல் மலர்ந்தது.


இவர்கள் இருவரும் காதலித்து வருவதாக கூறப்பட்ட நிலையில், தொடர்ந்து மௌனம் காத்து வந்த இந்த ஜோடி, அவ்வப்போது டேட்டிங்கிற்காக பொது இடங்களுக்கு வந்த போது பல முறை மீடியா கண்களில் சிக்கியுள்ளனர்.

இந்நிலையில் தங்களின் காதலை மட்டும் இன்றி திருமண வேலைகளையும் ரகசியமாக செய்து வந்த இந்த ஜோடிக்கு, ராஜஸ்தானில் உள்ள ஜெய் சல்மான் பேலஸில்  கோலாகலமாக திருமணம் நடந்தது.


பாலிவுட் பிரபலங்கள் பலரும் கலந்துகொண்டனர், அம்பானி மகள் ஈஷாவும் இவர்களது திருமணத்தில் கலந்துகொண்டிருக்கிறார்.தற்போது என்ன தகவல் என்றால் இவர்களது திருமணத்தில் 100 வகையான சாப்பாடு பரிமாறப்பட்டதாம் என்றும் வந்திருந்த பிரபலங்கள் பெறுமதி மிக்க பரிசினை வழங்கிச் சென்றுள்ளதாகவும் கூறப்படுகின்றது.


மேலும் இவர்களின் திருமணம் நடைபெறும் இடத்தின் உள்ளே பத்திரிக்கையாளர்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை. திருமணத்தில் கலந்து கொண்டவர்கள் யாரும் செல்போன், கேமரா போன்றவை உபயோகிக்கவும் தடை விதிக்கப்பட்டதாகவும் கூறப்படுகின்றது.

Advertisement

Advertisement