• Jul 24 2025

நாய்க்குட்டி மாதிரி சொன்னதை செய்த ஹீரோ.. கூப்பிட்டு வைத்து அவமானப்படுத்திய மணிரத்தினம்..!

Jo / 2 years ago

Advertisement

Listen News!

தென்னிந்திய சினிமாவின் முன்னணி இயக்குநராக  முதல் இடத்தில் இருப்பது இயக்குநர் மணிரத்தினம் தான். 

பின்னணிப் பாடகர் யேசுதாஸ் மகன் விஜய் யேசுதாஸ்,பாடகராக இருந்தாலும் இவருடைய ஆர்வம் அனைத்தும் நடிப்பில் தான் இருந்தது. அதற்காகவே சில படங்களில் நடிக்கவும் தொடங்கினார். இவர் தமிழில் தனுஷ் நடித்து வெளிவந்த மாரி படத்தில் வில்லனாக நடித்து பெயர் பெற்றார்.

இந்த சூழ்நிலையில் தான் இயக்குநர் மணிரத்தினத்தின் உதவி இயக்குநர் பொன்னியின் செல்வன் படத்தில் விஜய் யேசுதாஸுக்கு ஒரு காட்சி இருப்பதாக நடிக்க கூப்பிட்டு இருக்கிறார். உடனே அவரும் மணிரத்தினம் படம்னா கண்டிப்பாக நமக்கு நல்ல பெயர் கிடைக்கும் என்று போயிருக்கிறார். பிறகு அங்கே இவரை மொட்டை அடிக்க சொல்லி, தாடியையும் எடுக்க சொல்லி இருக்கிறார்கள். ஆனால் இவர் நான் மொட்டை அடிக்கிறேன் என்று அடித்து விட்டு தாடி மட்டும் இருக்கட்டும் என்று கூறியிருக்கிறார்.

அதன் பின் இதை பார்த்த ஓகே செய்த மணிரத்தினம், பிறகு படகு ஒட்டுவது போல் இவரை வைத்து காட்சி எடுத்து அனுப்பி விட்டார்கள். அதன்பின் மறுபடியும் கூப்பிட்டு குதிரை ஓட்ட சொல்லி இருக்கிறார்கள் அதையும் விஜய் யேசுதாஸ் செய்திருக்கிறார்.

மணிரத்தினம் சொன்னது எல்லாத்தையும் நாய்க்குட்டி மாதிரி செஞ்ச இவருக்கு கடைசியில் அவமானம் தான் மிச்சம். ஏனென்றால் இவர் நடித்த எந்த சீனுமே படத்தில் வரவில்லை. இப்படி கூப்பிட்டு அசிங்கப்படுத்தி விட்டார் என்று மிகவும் வருத்தப்பட்டு இருக்கிறார்,விஜய் யேசுதாஸ்.  

Advertisement

Advertisement