• Jul 24 2025

செல்லம்மா சீரியலில் இருந்து திடீரென விலகிய கதாநாயகி- அடடே இது தான் காரணமா?- அதிர்ச்சியில் ரசிகர்கள்

stella / 2 years ago

Advertisement

Listen News!

 

விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் செல்லம்மா. இந்த சீரியலுக்கென்று தனி ரசிகர் பட்டாளம் காணப்படுகின்றது.இதில் கதாநாயகனாக அர்னவ் மற்றும் கதாநாயகியாக அன்சிதா நடித்து வருகின்றனர்.

மேலும்  கணவனால் ஏமாற்றப்படும் தாயான செல்லம்மா தனது மகளான மலரை வளர்ப்பதற்காக எவ்வளவு துன்பப்படுகின்றார் என்பதை காட்டுகின்றது. இதனால் செல்லம்மாவை இரண்டாவதாக திருமணம் செய்ய சித்து முயற்சி செய்கின்றார்.


இருப்பினும் செல்லம்மா சித்துவிடம் இருந்து விலகி இருப்பதோடு மேகாவைத் திருமணம் செய்து கொள்ளுமாறும் வற்புறுத்துகின்றார். இதனால் சித்து செல்லம்மாவைத் திருமணம் செய்வாரா அல்லது மேகாவைத் திருமணம் செய்வாரா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் காணப்படுகின்றது.


இவ்வாறு சீரியல் விறுவிறுப்பாக ஓடிக் கொண்டிருக்கும் நிலையில் இந்த சீரியலில் மேகாவாக நடித்து வந்த திவ்யா வெளியேறிள்ளார். இவருக்கு பதிலாக இன்னொருவர் புதிதாக நடிக்க வந்துள்ளார்.அவர் விலகியதற்கான காரணம் இன்னும் தெரியவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement