• Jul 26 2025

67 வயதான பிரபல நடிகருடன் நெருக்கம் காட்டும் தொகுப்பாளினி... அதுவும் தனி விமானத்தில்...!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

தெலுங்கு சினிமாவின் மெகா ஸ்டார் என்ற பெயரோடு கொடிக்கட்டி பறந்து வருபவர் சிரஞ்சீவி. இவர் நடிகர் மட்டுமல்லாது தெலுங்கில் பிரபல அரசியல் வாதியாகவும் திகழ்ந்து வருகின்றார். இவர் நடிப்பில் இதுவரையில் ஏறக்குறைய 150 இற்கும் அதிகமான திரைப்படங்கள் உருவாகியுள்ளன.


இந்நிலையில் இவர் தற்போது பாலிவுட் சினிமாவின் பிரபல நடிகரான சல்மான் கானுடன் இணைந்து 'காட் ஃபாதர்' என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார்.

இறுதிக்கட்டப் படப்பிடிப்புகள் யாவும் நிறைவுபெற்று விரைவில் இப்படம் வெளியாகவுள்ளது. இந்நிலையில் இப்படத்தின் 'தார் மார் டக்கர் மார்..' என்ற பாடல் வெளியாகி வைரலாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.


சமீபகாலமாக இப்படத்தின் ப்ரமோஷன் நிகழ்வுகள் பிரமாண்டமாக நடைபெற்று வருகின்றன. அவ்வாறான நிகழ்வுகளில் கலந்து கொண்டு வரும் சிரஞ்சீவி தன்னுடைய தனி விமானத்தில் பிரபல தொகுப்பாளினி ஸ்ரீமுகி-க்கு பேட்டி கொடுத்துள்ளார்.


மேலும் அந்த விமானத்தில் நடிகர் சிரஞ்சீவியுடன் மிகவும் நெருக்கமாக இருந்து புகைப்படத்தினையும் எடுத்திருக்கின்றார் ஸ்ரீமுகி. அதுமட்டுமல்லாது அப்புகைப்படத்தை ஸ்ரீமுகி அவரது சமூக வலைத்தள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். 


இதை பார்த்த ரசிகர்கள் "இப்படி நெருக்கமாக இருந்து தான் பேட்டி எடுப்பீர்களா" எனக் கேட்டு கண்டபடி கருத்துக்களை பகிர்ந்து வருகிறார்கள்.

Advertisement

Advertisement