• Jul 24 2025

'ஜெயிலர்' படத்தின் பிரம்மாண்ட வெற்றி... ரஜினிக்கு BMW காரைப் பரிசளித்த பிரபலம்..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

இயக்குநர் நெல்சன் திலிப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் முதல் முறையாக நடித்துள்ள திரைப்படம் ஜெயிலர். சன் பிக்சர்ஸ் நிறுவனம் அதிக பொருட்செலவில் தயாரித்த இப்படத்தில் ரஜினிகாந்துக்கு ஜோடியாக ரம்யா கிருஷ்ணன் நடித்துள்ளார்.

மேலும் இவர்களுடன் இணைந்து மோகன்லால், சிவராஜ்குமார், சுனில், ரெடின் கிங்ஸ்லி, வசந்த் ரவி, மிர்னா உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.


பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இப்படம் கடந்த 10-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான இப்படமானது வெளியான நாளிலிருந்து இன்றுவரை கிட்டத்தட்ட 600கோடியை நெருங்கி வசூலை வாரிக் குவித்த வண்ணம் தான் இருக்கின்றது. 

இந்நிலையில் இந்த சந்தோஷத்தைக் கொண்டாடும் விதமாக இப்படத்தினுடைய தயாரிப்பாளர் கலாநிதி மாறன் ரஜினிகாந்துக்கு ரூ.1.24 கோடி மதிப்புள்ள BMW x7 ரக சொகுசு காரை அவருக்கு பரிசாக வழங்கியுள்ளார். 


அந்தவகையில் ரஜினியிடம் 1.24 கோடி மதிப்புள்ள BMW x7 மற்றும்  BMW i7 ஆகிய இரண்டு ரக சொகுசு கார்களை காட்டி அதில் ஒன்றை தேர்வு செய்யுமாறு கலாநிதி மாறன் கேட்டுக் கொண்டார். அதில் ரஜினிகாந்த் BMW x7 தேர்வு செய்தார். அந்தக் காரையே அவருக்கு தற்போது பரிசாக வழங்கி கௌரவித்திருக்கின்றார் கலாநிதி மாறன்.


Advertisement

Advertisement