• Jul 25 2025

கர்ப்பமாக்கிவிட்டு கைவிட்ட கணவர் – திவ்யா செய்த செயல்..குவியும் வாழ்த்துக்கள்..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

சின்னத்திரை நடிகையான திவ்யா மற்றும் அர்னாவ் விவகாரம் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் சமூகவலைத்தளத்தில் முழுவதும் ஹாட் டாபிக்காக சென்று கொண்டு இருந்தது. இந்நிலையில் 5 மாதம் கர்ப்பமான திவ்யா செய்திருக்கும் செயலுக்கு அவரின் ரசிகர்கள் வாழ்த்துகள் கூறி வருகின்றனர்.எனினும்  சமீபத்தில் தான் செல்லம்மா சீரியல் நடிகர் ஆர்னவ்வும், செவ்வந்தி சீரியல் நடிகை திவ்யாவும் ரகசியமாக திருமணம் செய்து இருந்தனர்.மேலும்  இவர்கள் இருவரும் இதற்கு முன் சன் டிவியில் ஒளிபரப்பான கேளடி கண்மணி என்ற தொடரில் நடித்து இருந்தார்கள்.

எனினும்  இதற்கு முன்பே திவ்யாவிற்கு திருமணம் ஆகி 5 வயதில் மகள் இருக்கிறார். இவருடைய முதல் திருமணத்தில் என்ன பிரச்சனை? எப்படி விவாகரத்தானது? யார் என்ற விவரம் எதுவும் தெரியவில்லை. இதன் பின் இவர் இரண்டாவதாக அர்னவை திருமணம் செய்து கொண்டார். சமீபத்தில் தான் கர்ப்பமாக இருப்பதை திவ்யா அறிவித்து இருந்தார். இதற்கு ரசிகர்கள் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து இருந்தார்கள்.

இப்படி ஒரு நிலையில் அர்னவ் தன்னை ஏமாற்றிவிட்டதாக திவ்யா பகீர் குற்றச்சாட்டை எழுப்பி இருக்கிறார்.அதோடு அர்னவிற்கு செல்லம்மா சீரியல் நடிகையுடன் தொடர்பு இருப்பதாகவும், அதை கேட்டதற்கு அர்னவ் தன்னை தாக்கியதால் வயிற்றில் அடிபட்டு ரத்தம் வந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றதாகவும் திவ்யா கூறி இருந்தார். மேலும், காவல் துறையில் தனக்கு நேர்ந்த கொடுமைகளை கூறி தன் உயிருக்கு ஏதாவது ஆபத்து ஏற்பட்டால் அதற்கு காரணம் அர்னவ் தான் என்றும் திவ்யா புகார் கொடுத்து இருந்தார்.

அத்தோடு  அர்னவ் செல்லமா சீரியல் நடிகை உட்பட பல பெண்களுடன் தொடர்பில் இருந்ததை வெளிக்காட்டினார் திவ்யா. மேலும் இது குறித்து அர்னவ் விளக்கமளித்த போது நாங்கள் ஐந்து வருடமாக காதலித்து கொண்டிருந்தோம் அவர் விவாகரத்து ஆனவர் என்பது தெரியும். ஆனால், திருமணம் செய்யப் போகும் கடைசி நிமிடத்தில் தான் தனக்கு விவாகரத்து ஆனதையே அவர் கூறினார். நான் ஐந்து வருடங்கள் காதலித்து விட்டோமே என்று இதையெல்லாம் சகித்துக் கொண்டேன் என்று கூறி இருந்தார்.

எந்த நோக்கில் அவர் செய்தார் என்பது எனக்கு தெரிய வேண்டுமென்று இருவருமே மாற்றி மாற்றி பேட்டி கொடுத்திருந்தார்கள். இதை தொடர்ந்து திவ்யா கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீசார் அர்னவ் மீது வன்கொடுமை சட்டம் உள்ளிட்ட மூன்று பிரிவுகளில் கீழ் வழக்கு பதிவு செய்திருக்கிறது.இவ்வாறுஇருக்கையில் ஷூட்டிங் சென்ற அர்னவை போலீசார் கைது செய்தனர். சிறிது காலம் சிறையில் இருந்த அர்னவ் கடந்த சில தினங்களுக்கு முன்னர் தான் அர்னவ் ஜாமினில் வெளியில் வந்தார்.

இவ்வாறுஇருக்கையில் கர்ப்பமாகி ஐந்து மாதங்களான திவ்யாவிற்க்கு அவர் நடித்துவரும் செய்வந்தி பட சீரியலின் படப்பிடிப்பு தளத்திலேயே வளைகாப்பு நடைபெற்றது. கர்ப்பமாக இருந்தபோதும் தொடர்ந்து சீரியலில் நடித்து வரும் திவ்யா சமீபத்தில்தான் அவருடைய அம்மா மற்றும் அப்பா பற்றி உருக்கமான பதிவு ஒன்றை போட்டிருந்தார். இந்நிலையில் புதிய கார் ஒன்றை வாங்கியதாக தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். கர்பமாக இருந்து கணவன் இல்லாமல் இருந்தாலும் கூட தன்னம்பிக்கையுடன் தொடர்ந்து முன்னேறி வரும் செவ்வந்தி திவ்யாவிற்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.



Advertisement

Advertisement