• Jul 26 2025

திருமணம் செய்து கழட்டி விட்டு இரண்டாம் திருமணம் செய்த கணவர்...நடிகை வடிவுக்கரசியின் வாழ்க்கையில் இத்தனை சோகங்களா?

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

நடிகை வடிவுக்கரசி தான் எடுத்த தப்பான முடிவால் தன்னுடைய வாழ்க்கையில் ஏற்பட்ட சோகங்கள் குறித்து பேட்டி ஒன்றில் மனம் திறந்து பேசி உள்ளார்.

தான் பல வருடங்களாக சம்பாதித்த சொத்து எல்லாம் என்னை விட்டுப் போய்விட்டது என்றும் ஆனால் அதில் இருந்து நான் மீண்டு வந்த கதை என அவர் பேசிய பல தகவல்கள் பலருக்கும் நம்பிக்கையூட்டும் விதமாக உள்ளது.

வெள்ளித்திரையில் கதாநாயகியாக அறிமுகம் ஆகி அதை தொடர்ந்து குணச்சித்திர வேதங்களிலும் வில்லியாகவும் நடித்து பலரையும் வியக்க வைத்த நடிகை வடிவுக்கரசி தன்னுடைய வாழ்க்கையில் நடந்த பல சோக கதைகளை பற்றி சமைப்பதில் பேட்டி ஒன்றில் பேசியிருக்கிறார்.

அத்தோடு அதில் தான் தான் படித்து முடித்து முதலில் ஒரு ஸ்கூல் டீச்சராக வேலை பார்த்து பின்னர்  அந்த சம்பளம் போதாது என்று அதைத் தொடர்ந்து அடுத்தடுத்து பல வேலைகளில் செய்து கொண்டிருக்கும் போது தான் தனக்கு நடிக்க வாய்ப்பு கிடைத்தது என்றும் அப்போது கிடைத்த வாய்ப்பை விட்டு விடாமல் நானும் பல திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருந்தேன் அந்த நேரத்தில் வீட்டில் ஒரு நபரை பார்த்து எனக்கு திருமணம் செய்து வைத்திருந்தார்கள்.

மேலும் அந்த நபருக்கு எனக்கும் கொஞ்சம் கூட செட் ஆகவே இல்லை அதனாலே அவர் என்னை பிரிந்து போய்விட்டார் ஊரில் வேற ஒரு பெண்ணை திருமணம் செய்து அவருக்கு ஒரு குழந்தையும் பிறந்தது அந்த குழந்தையை அவர் ஹாஸ்டலில் விட்டிருந்தார் அந்த குழந்தையையும் நான் தான் எடுத்து வளர்த்து படிக்க வைத்துக் கொண்டிருந்தேன் பிறகு அவருடைய நம்பிக்கையால் நான் ஏமாந்து ஒரு குழந்தைக்கு அம்மாவாக மாறிவிட்டேன்.

என்னுடைய குழந்தை பிறந்த பிறகு அவர் ஊரில் இருந்த அந்த மனைவியோடு சேர்ந்து வாழ்ந்து வந்திருக்கிறார் அவருக்கு இரண்டாவது ஒரு குழந்தை பிறந்திருக்கிறது அது எனக்கு தெரியாது பல நாட்களுக்குள் பின்னர் தான் எங்களுக்கு தெரிய வந்தது இந்த ஏமாற்றத்தில் இருந்தால் இருந்தபோதுதான் எனக்கு அடுத்ததாக என்னுடைய வாழ்க்கையில் பெரிய பிரச்சனை வந்தது.

Advertisement

Advertisement