• Jul 25 2025

கிலோ கணக்கில் தங்கம்,பங்களா என விலையுயர்ந்த பரிசுகளை வழங்கி பிரபல நடிகையை திருமணம் செய்த கணவர்- அந்த நடிகை யார் தெரியுமா

stella / 2 years ago

Advertisement

Listen News!


தமிழ் சினிமாவில் பரதி நடிப்பில் வெளியான முனியாண்டி விலங்கியல் மூன்றாமாண்டு’ என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகியவர் தான் நடிகை பூர்ணா.இப்படத்தில் கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து ‘தகராறு’, ‘’சவரக்கத்தி’, ‘காப்பான்’ உள்பட பல திரைப்படங்களில் நடித்திருக்கின்றார்.

இது தவிர மலையாளம் தெலுங்கு ஆகிய மொழிகளிலும் நடித்து வருகின்றார். இவர் அண்மையில் ஆசிப் அலி என்ற தொழிலதிபரை மணந்தார்.கடந்த சில தினங்களுக்கு முன்னர் கேரளாவில் வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது இது குறித்த புகைப்படங்களும் வெளியாகி ரசிகர்களைக் கவர்ந்திருந்தது.


நடிகைகள் எப்போதுமே பிரம்மாண்டமான தொழிலதிபர்கள் மற்றும் நடிகைகள் மற்றும் பண வசதி அதிகம் இருக்கும் நபர்களை தான் திருமணம் செய்து வருகிறார்கள், அந்த வகையில் தான் நடிகை பூர்ணா ஆசிப் அலி என்பவரை திருமணம் செய்துள்ளார், இவர் திருமணம் செய்து இப்போது பரிசாக சுமார் 30 கோடி செலவில் பரிசளித்துள்ளார்,


அதில் 2700 கிராம் தங்க நகைகள், 25 கோடி மதிப்பிலான ஆடம்பர பங்களா மற்றும் புத்தம் புதிய சொகுசு கார் ஆகியவைகளை கொடுத்துள்ளார். அதுமட்டுமின்றி தனது நிறுவனத்தின் பங்குகளையும் தனது மனைவி பூர்ணாவுக்கு அவர் அளித்துள்ளதாகவும், இவை அனைத்தும் சேர்த்து மொத்தம் 30 கோடி மதிப்பு இருக்கும் என்று கூறப்படுகிறது.


Advertisement

Advertisement