• Jul 25 2025

நடிகர் ஷாருக்கான் வீட்டில் நடந்த அசம்பாவிதம்; ரசிகர்களின் எல்லைமீறிய செயலுக்கு பலர் கண்டனம்

Prema / 2 years ago

Advertisement

Listen News!

மும்பையில் அமைந்துள்ள நடிகர் ஷாருக்கான் வீட்டில் மர்ம நபர்கள் நுழைந்த சம்பவமானது தற்போது திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கின்றது. அதாவது 'மன்னட்' என அழைக்கப்படும் அந்த வீட்டில் இரண்டு பேர் சுவர் ஏறி குதித்து நுழைய முற்பட்டுள்ளனர். இந்த தகவலை அறிந்து அங்கு விரைந்து சென்ற போலீஸார், அந்த இரு நபர்களையும் உடனடியாக கைது செய்தனர். 


அதன் பின்னர் காவல் நிலையத்துக்கு அழைத்து செல்லப்பட்டு இருவரிடமும் பல கோணத்தில் விசாரணை நடத்தப்பட்டது. அதில் அவர்கள் கூறிய காரணத்தை கேட்ட போலீஸார் அதிர்ந்து போய் உள்ளனர். அதாவது அந்த நபர்கள் இருவரும் குஜராத்தை சேர்ந்தவர்கள் என்றும் ஷாருக்கானின் தீவிர ரசிகரான அவர்கள், ஷாருக்கானை நேரில் சந்திப்பதற்காகத்தான் சுவர் ஏறி குதித்து வீட்டுக்குள் நுழைய முயன்றதாக தெரிவித்து உள்ளனர். ஷாருக்கானை காண வேண்டும் என்ற ஆர்வ மிகுதியால் ரசிகர்கள் செய்த இந்த செயலைக் கேட்டு போலீஸார் மட்டுமன்றி சுற்றி நின்றவர்களும் அதிர்ந்துபோய் உள்ளனர்.


எது எவ்வாறாயினும் போலீஸார் அவர்கள் கூறிய காரணத்தை முற்றுமுழுதாக நம்பவில்லை. ஏனெனில் ஷாருக்கானின் மனைவி கெளரி கான் மீது நேற்று லக்னோவில் வழக்கு ஒன்று பதிவு செய்யப்பட்டது. அவர் மீது தொழிலதிபர் ஒருவர் தந்த மோசடி புகாரின் பேரில் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது. 

அதாவது விளம்பரத்தில் நடிப்பதற்காக ரூ.86 லட்சம் வாங்கிவிட்டு கெளரிகான் மோசடி செய்ததாக அந்தப் புகாரில் தெரிவிக்கப்பட்டது. இதற்கும் ஷாருக்கான் வீட்டில் நுழைய முயன்றவர்களுக்கும் ஏதேனும் சம்பந்தம் இருக்கிறதா என்ற கோணத்திலும் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இந்நிலையில் ஷாருக்கான் வீட்டில் நடந்த இந்த சம்பவம் ஆனது பாலிவுட் திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதுமட்டுமல்லாது ரசிகர்களின் இந்த வரம்புமீறிய செயலுக்கு சமூக வலைதளங்களில் பலர் கண்டனங்களை தெரிவித்தும் வருகின்றனர். 

Advertisement

Advertisement