• Jul 25 2025

திரையுலகில் தனது 25ஆவது ஆண்டினைப் பூர்த்தி செய்த இந்தியன் 2 திரைப்பட பிரபலம்

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின்  சமீபகாலமாக வெளியாகும் திரைப்படங்கள் அனைத்தும் சூப்பர் ஹிட் வெற்றி பெற்று வருவதோடு ரசிகர்களின் ஆதரவையும் பெற்று வருகின்றது. அந்த வகையில் இறுதியாக வெளியாகிய விருமன் திருச்சிற்றம்பலம் ஆகிய திரைப்படங்களுக்கு ரசிகர்களிடையே நல்ல ஆதரவு கிடைத்துள்ளது.


அந்த வகையில் பிரமாண்ட படங்களாக உருவாகி வரும் திரைப்படங்கள் தான் இந்தியன் 2 மற்றும் ஜெயிலர். இதில் இந்தியன் 2 திரைப்படத்தில் கதாநாயகனாக கமலாஹாசனும் ஜெயிலர் திரைப்படத்தி ரஜினிகாந்தும் கதாநாயகனாக நடித்து வருகின்றனர்.


இதில் இந்தியன் 2 படத்தின் ஒளிப்பதிவாளராக பணிபுரிபவர் ரத்னவேல். அதே போல் ஜெயிலர் படத்தில் கலை இயக்குநராக பணிபுரிந்து வருபவர் கிரண்.

இவ்விருவரும் நடிகை வரலக்ஷ்மியுடன் இணைந்து நகை விளம்பரம் ஒன்றில் ஒன்றாக பணிபுரிந்துள்ளார்கள். இந்நிலையில்,  ஒளிப்பதிவாளர் ரத்னவேல் திரையுலகில் காலடி எடுத்து வைத்து 25 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளதன் காரணமாக இந்த படப்பிடிப்பின் போது கேக் வெட்டி கொண்டாடியுள்ளார்கள். 


Advertisement

Advertisement