• Jul 25 2025

சாமியே சரணம் ஐயப்பா... Devotional Round இல் அரங்கையே அதிர வைத்த மைத்ரேன்... 'Super Singer' ஷோவில் நிகழ்ந்த சுவாரஷ்ய சம்பவம்..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் ரியாலிட்ரி ஷோ தான் சூப்பர் சிங்கர் ஜுனியர் சீசன் 9. இந்த நிகழ்ச்சியினை மாகாபா ஆனந்த் மற்றும் ப்ரியங்கா ஆகியோர் தொகுத்து வழங்கி வருகின்றனர். 


அந்தவகையில்  senior super singer-9 இடம்பெற்று முடிந்தமையைத் தொடர்ந்து தற்போது சிறியவர்களுக்கான 9-ஆவது சீசன் வெற்றிகரமாக நடைபெற்று வருகின்றது. அதில் டிவோஷனல் ரவுண்டு இந்த வாரம் ஒளிபரப்பப்படவுள்ளது.


இந்த நிலையில் இந்த நிகழ்ச்சிக்கான ப்ரோமோ வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. மைத்ரேன் என்ற சிறுவன் ஐயப்ப சுவாமியை வேண்டிப் பாடல் பாடுகின்றார். அதாவது "சபரி வீரனே வந்திடுவா, சபரி அன்னையைப் பணித்திடுவா.." என்ற பாடலைப் பாடி அரங்கில் இருந்தவர்களை மெய் சிலிர்க்க வைக்கின்றார். 


பின்னர் அங்கிருந்தவர்களும் மேடையேறி மைத்ரேனுடன் இணைந்து பாடல் பாடுகின்றனர். இவ்வாறாக இந்தப் ப்ரோமோ வெளியாகி இருக்கின்றது. மைத்ரேனின் குரல் திறமையைப் பார்த்த வியந்த பலரும் அவரைப் பாராட்டி வருகின்றனர்.

இதோ அந்தப் ப்ரோமோ வீடியோ..! 


Advertisement

Advertisement